பெண்கள் போராடுவது பேஷனாகி விட்டதா.. எடப்பாடியாருக்குக் குவியும் கண்டனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் கூறினார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பெண்களின் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பெண்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளதாக குற்றச்சாட்ட எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கண்டித்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..

இதுவெல்லாம் பத்தாது

அதிமுவுக்கு ஒட்டு போட்டதுக்கு, எங்களுக்கு இதுவெல்லாம் பத்தாது என்கிறார் இந்த நெட்டிசன்

எரிச்சலை ஏற்படுத்துகிறது

மக்கள் வாழ்வாதாத்துக்காக போராடுவதை அரசு ஃபேஷன் என கூறுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.. என்கிறார் இந்த வலைஞர்

பெண்ணின் பெயரை முன்னிறுத்தி..

ஒரு பெண்ணின்(அம்மா) பெயரை முன்னிறுத்தி நீங்கள் அரசியல் செய்யலாம், ஆனால் போராட்டம் செய்ய கூடாதா? என்கிறார் இந்த நெட்டிசன்

அறியாத கட்சி..

போராட்டம் என்றால் என்ன என்பதை அறியாத கட்சியில் ஒருவா் முதல்வா் ஆனால் இப்படித்தான் கூறுவார்.. என்கிறார் இந்த வலைஞர்

எஃப்டிவி பார்ப்பார் போல

முதல்வர் எஃப்டிவி பார்ப்பார் போல, பெண்கள் போராடுவது கூட அவர் கண்களுக்கு பேஷனாக தெரிகிறது. வத்தபொடி தூவினால் சரியாக தெரியும் போராட்டமா ? பேஷனா என்று கூறுகிறார் இந்த வலைஞர்

ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா?

இந்த கருத்து உங்களின் முன்னாள் பாஸ் ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா? அவர்களும் ஒரு பெண் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தவர்.. என்கிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi palanisami said ladies contibuting in protest became fashion now. Public condemns for this Statement of Edappadi palanisami.
Please Wait while comments are loading...