இரட்டை இலையை தேடி வாக்களித்த தமிழன்... இன்று பப்பாளி இலையை தேடி ஓடுறான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

பொதுவாக மீம்ஸ்கள் என்றாலே சிரிக்க வைப்பது போன்று இருக்கும். ஆனால் டெங்கு தொடர்பான மீம்ஸ்களை பார்த்தால் சிந்திக்க வைப்பது போன்றும் உள்ளது.

உயிருக்கே உலை வைக்கும் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து பல்வேறு நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான மீம்ஸ்களை பாருங்கள்.

இரட்டை இலையை தேடி

இரட்டை இலையை தேடி வாக்களித்த தமிழன்...
இன்று பப்பாளி இலையை தேடி ஓடுறான் என்கிறார் இந்த வலைஞர்.

மருத்துவமனைக்கு போங்க..

டெங்கு வராமயிருக்க நிலவேம்பு கஷாயம்,பப்பாளி இலைன்னு எதை வேணாலும் சாப்பிடுங்க
வந்துட்டா தயவு செஞ்சு மருத்துவமனைக்கு போங்க

ஆனா கொசுவ பார்த்தா பயம்

நம்ம முன்னாடி ஒரு புலியோ, சிங்கமோ வந்து நிக்கும்போது நமக்கு ஏற்படுற பயத்தவிட கொசுவ பார்த்து அதிக பயம் ஏற்படனும்...

அது அந்த காலம்

காட்டு விலங்கிற்கு பயந்தது அந்த காலம்
கொசுவிற்கு பயப்படுவது இந்த காலம்

உனக்கு இருக்கு சங்கு

நிலவேம்பு குடிநீர் உட்கொள்ளும் அளவு!
நமக்கு 60மில்லி லிட்டர்!

அடேய் டெங்கு!
உனக்கு ஊதுரோம்டா சங்கு!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans commented on Dengue fever and TN Government's protection process.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற