For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

International Yoga day: மன அழுத்தம் குறைய.. யோகா பண்ணுங்க

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சர்வதேச யோகா தினம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அப்படி நோயில்லாமல் வாழ வேண்டுமென்றால் யோகா அவசியம். மன அழுத்தத்தைக் குறைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கிறது யோகாசனம். இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

international yoga day 2020 today

ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கலை இது. வாழும் கலை இந்த யோகா. யோகா செய்வதன் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுவதால் உடல் புத்துணர்ச்சிப் பெறுகிறது. ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை யோகாவின் அவசியத்தை உலகிற்கு உணர்த்த ஜூன் ஆம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட வேண்டும் என அறிவித்தது.

யோகா செய்யுங்கள்.. கொரோனாவை வீழ்த்துங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி உரை யோகா செய்யுங்கள்.. கொரோனாவை வீழ்த்துங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி உரை

சூரிய நமஸ்காரம் வஜ்ராசனம் மகராசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதால் உடல் வலிமையும் மன வலிமையும் அதிகரிக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இன்று டென்ஷன் இல்லாத மனிதர்களே இல்லை அவர்களுடைய மனஅழுத்தத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது. மூட்டு வலி வராமல் தடுக்கிறது.

international yoga day 2020 today

யோகா செய்வதன் மூலம் சருமம் புத்துணர்ச்சி பெரும். அடிவயிறு வலிமை பெறும். தசைநார்கள் வலுவடையும். எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான பயிற்சி யோகா. தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உடலுக்கும் மனதிற்கும் சுகம் தரும் கலை இந்த யோகா.

யோகா செய்வதன் மூலம் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். இதை தினமும் செய்தால் நிச்சயம் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் பெறுவீர்கள். தினமும் யோகா செய்யுங்க நோய்களுக்கு குட்பை சொல்லுங்க.

English summary
Practice Yoga daily to keep the body and mind fit, healthy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X