For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
அனாதைப் பிணமாய் கிடந்த வ.உ.சியின் கொள்ளுப் பேத்தியின் உடல்

சென்னை:

"செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்திய விடுதலைக்காக போராடிய தியாகி வ.உ.சி.யில் மகள் உலகம்மை. இவரது மகள் காந்திமதி. காந்திமதியின் 5வது மகள் சீதாலட்சுமி. வயது 42.

திருமணமாகாத இவர் நீண்ட காலமாக வறுமையில் வாடினார். குடும்பத் தகராறில் இவருக்குறிய சொத்து பாகம் தரப்படாததால் அவருக்கு இந்நிலைஏற்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அம்மாவட்ட கலெக்டராக இருந்த ஷீலாராணி சுங்கத் மூலம் இந்தஉதவியை அவர் பெற்றார்.

பின்னர் திருச்சி அடுத்த காட்டூரில் உள்ள காமாட்சி நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்தஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி இவர் நோய்வாய்ப்பட்டார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, புற்றுநோய் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். புற்றுநோய்தொற்றியுள்ள குடல் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அதன் பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், மறுபடியும்திருச்சி அரசு மருத்துவமனைக்கே கொண்டு வரப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்று அவர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் மரணம் எய்திய தகவல் அவரது உறவினர்களான வ.உ.சி.யின்வாரிசுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 நாட்களாகியும் உறவினர்கள் யாரும் வரவில்லை. வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தியின் உடல் இத்தனைநாட்களும் பிண அறையில் இருந்தது.

உறவினர்கள் மட்டுமின்றி எந்த தொண்டு நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும் கூட அவரது உடலை பெற்று அடக்கம் செய்ய ன் வரவில்லை. கடைசியில்திருச்சி மாநகராட்சி சார்பில் சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி சீதாலட்சுமியின் உடல் புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாபெரும் தியாகியின் பேத்திக்கு ஏற்பட்ட இந்த நிலை மிகுந்த வருத்தத்திற்குரியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X