செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரத்தம் கேட்கும் பாக் ஜலசந்தி

தனுஷ்கோடி:

"நீச்சல்" காளி...கடல் தேவதையின் கருணையைப் பெற்றவர் இந்த காளி. காளியின் கடலாட்சி, தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ள தனுஷ்கோடியில்மிகப் பிரசித்தமானது.

மீனவரான காளி, 60 மற்றும் 70-களில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை நான்கு முறை பாக் ஜலசந்தி வழியாக கடலை நீந்திக் கடந்து சாதனைபடைத்தவர்.

வங்கக் கடலுக்கும், இலங்கையின் மன்னார் வளைகுடாவுக்கும் இடையே, உள்ள சிறிய பகுதிதான் தனுஷ்கோடி. கடல் தேவதையின் கோபத்திற்கு ஆளானதனுஷ்கோடி தனது பெரும் பகுதியை புயலுக்கு தாரை வார்த்தது.

"நீச்சல் காளி, 1968-ல் ஒருமுறை பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராமேஸ்வரம் நகரியம் சார்பில் இந்தபோட்டி நடத்தப்பட்டது.

காளியின் காலத்தில் இருந்த பாக் ஜலசந்தி இப்போதும் அப்படியே உள்ளது. ஆனால் சூழ்நிலைதான் மாறி விட்டது. இந்தப் பகுதி வழியாக இலங்கையின் வடபகுதியிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த பல தமிழர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 12 இந்தியமீனவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உப்புக் கடல் இன்று ரத்தக் கடலாகியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை உதிர்ந்த உயிர்களின் எண்ணிக்கை 4. அதிகரித்து வரும் இந்தப்படுகொலைப் பட்டியலுக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து குரல் எழுப்பிவருகின்றன.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பது தொடர்பாக 1974-ல் இலங்கை அரசுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுஅக்கட்சிகள் கூறி வருகின்றன.

ஆனால் நீச்சல் காளியின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. 70 வயதாகும் காளி கூறுகிறார். அவர்களது எல்லைக்குள் நாம் போனது நமதுதவறுதான். அவர்களது பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதை நமது மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார் காளி.

தனுஷ்கோடியில் தங்கி, கடலுக்குள் சென்று மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வரும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காளியின் கருத்தை ஏற்கவில்லை.மீனவரின் தாயாரான அந்தோணி அம்மா கூறுகிறார், நான் எனது மகன்களை கடலுக்குள் அனுப்பி வைத்து விட்டு, பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.கச்சத்தீவு நம்முடன் இருந்திருந்தால், எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. நமது எல்லைக்குட்பட்ட கடற் பகுதியில் அதிக சகதியாக உள்ளது. இதனால்மீன்கள் கிடைப்பது கடினம். மேலும் இங்கு மீன்களுக்கு உணவு கிடைப்பதும் கிடையாது. அதேசமயம், இலங்கைக்கு உட்பட்ட கடற் பகுதியில்மீன்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறது. எனவே அங்குதான் மீன்களும் அதிகம். இதன் காரணமாகவே நமது மீானவர்கள் அங்கு செல்ல நேரிடுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை கடல் எல்லைப் பகுதி மிகவும் குறுகியது. இங்குள்ள யாருக்கும் சொந்தமில்லாத பகுதியில் இருந்து கொண்டு இலங்கைக்கடற்படை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என்கிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற