For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை பிரச்சனைக்கு சுவாமியின் புதிய யோசனை

சென்னை:

கூட்டாட்சித் தத்துவத்தை இலங்கையை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் இலங்கைப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி யோசனை தெரிவித்தார்.

எப்படியும் இலங்கைப் பிரச்சனையில் இறுதியில் இந்தியா தலையிட்டே ஆகவேண்டும். அந்த சமயத்தில் கடந்த முறை போல் இல்லாமல் மிகவும்புத்திசாலித்தனமாக இந்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் சமரசம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்முயற்சியில் இந்தியா இறங்கக்ககூடாது. அதற்கு பதிலாக பிரபாகரனையும் பொட்டுஅம்மனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சென்னையில் செவ்வாய்க் கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி;

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிலிதா - சசிகலாவுக்கு சொந்தமான ஜெயா டி.வியில் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

பழ. நெடுமாறன் பேட்டியை ஒளிபரப்புகின்றனர்.

புலிகளை பெரிய ஹீரோக்களாக சித்தரிக்கின்றனர்.அதை தடை செய்யவேண்டும்.வீரமணி, நெடுமாறன், சசிகலாவின் நடராஜன், டாக்டர் கிருஷ்ணசாமிஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

வை.கோ., டாகடர் ராம்தாஸ் ஆகியோருக்கு புலிகளை ஆதரித்தே தீர வேண்டியகட்டாயம் உள்ளது. அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்சிநடத்துகின்றனர்.

இவர்களுக்கு டில்லியில் செல்வாக்கு உள்ளது என்று நம்பி புலிகள் பணம்கொடுத்ததுள்ளனர். ஆனால், இப்போது இவர்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லைஎன்பதை புலிகள் புரிந்து கொண்டனர்.

இவர்களுக்கு மட்டுமல்ல; இவர்களின் தலைவராக டில்லியில் இருக்கும் மத்தியஅமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டசுக்கும் செல்வாக்கு இல்லை. இப்போது இவர்கள்பேச்சை கேட்டு இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பாமல் இந்தியா இருக்கலாம்.

ஆனால், கடைசியில் எப்படியும் இந்தியா தலையிட்டுத் தான் ஆகவேண்டும்.அப்படிஒரு கட்டாயத்தில் கடந்த கால அனுபவம் போல் இல்லாமல் மிகவும்புத்திசாலித்தனமாக மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்தை இலங்கையை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அந்தபிறகு தான் இந்தியா தலையிட வேண்டும். ராணுவத்தை அனுப்புவது என்றால்,முதலில் கொழும்புக்கு அனுப்ப வேண்டும். பின்னர் தான் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவேண்டும்.

தமிழ்நாட்டில் மூப்பனார் தலைமையில் புதிய அணியை ஏற்படுத்தும் முயற்சியில்ஈடுப்ட்டுள்ளேன். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருகின்றன.தேசிய கண்ணோட்டம் உள்ள கட்சிகளுக்கு தான் ஆதரவு உள்ளது.

இப்படி தான் தமிழகத்தில் 96ல் ஒரு அணியை உருவாக்கினேன். அதன் பின்னர் 98ல்உருவாக்கினேன். அந்த அணிகள் வெற்றி பெற்றன. ஆனால், அந்த அணியில் நான்நீடிக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டமே என்றார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X