For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிளஸ் டூ: ஒரே பள்ளி மாணவர்கள் சாதனை
சென்னை:

ப்ளஸ் டூ தேர்வில் சென்னையைச் சேர்ந்த வித்யாசாகரும், மாணவி மீராவும் 1200க்கு 1181 மதிப்பெண்கள் பெற்றுமாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இருவரும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஒரே பள்ளியைச்சேர்ந்த 2 பேர் மாநில அளிவில் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை.

மார்ச் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 524 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. 83.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 71ஆயிரத்து 55 மாணவர்களில் 78.69 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 743மாணவிகளில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10 சதவீதம்அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடம் பெற்ற வித்யாசாகர், மீரா:

சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த வித்யாசாகர் இயற்பியல், வேதியியல்,கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்தமதிப்பெண்கள் 1200 க்கு 1181. வித்யாசாகர் உடன் படித்த மாணவி மீராவும் மூன்று பாடங்களில் 200 க்கு 200மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். இவரும் 1200 க்கு 1181 மதிப்பெண்கள்பெற்றுள்ளார்.

ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேர் மூன்று பாடங்களில் ஒரே மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும்முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை.

உடுமலைப்பேட்டை சீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீசக்தி இயற்பியல், வேதியல், கணிதத்தில் 200மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள்1168.

கம்ப்யூட்டர் கனவில் யோகேஷ்குமார்:

சென்னை முகப்பேர் கிழக்கு டிஏவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் யோகேஷ்குமார் மூன்றுபாடங்களில் 200 மதிப்பெண்கள் பெற்று கம்ப்யூட்டர் சயன்சில் 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்றமொத்த மதிப்பெண்கள் 1165. சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படித்து கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

தமிழுக்கு முதலிடம் தந்த கலைவாணி:

திருச்சி பெல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஏ.கலைவாணி தமிழில் 200 க்கு 195 மதிப்பெண்கள் பெற்றுதமிழில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளியின் ஹேமா 194 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றார்.மேட்டுப்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஜி.லாவண்யா தமிழில் 200 க்கு 194 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுபற்றி இவர் கூறுகையில், தமிழில் மேல்படிப்புப் படிக்கத் திட்டமில்லை. படித்தால் வேலைவாய்ப்பில் பிரச்சனைஏற்படும். அதனால் எம்பிபிஎஸ் படிக்கப் போகிறேன். அது கிடைக்கவில்லையென்றால் கணிதப் பாடத்தைமுதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பேன் என்றார்.

1942 கணக்குப் புலிகள்:

இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 1942 பேர் கணக்கில் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தசென்டம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவமாணவிகள் கணக்கில் 200மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாநகராட்சிக்கு மரியாதை:

மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர் வீரபாண்டி. இவர் புவியியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் 200 க்கு 194 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார் வேலூரைச் சேர்ந்தமாணவி எம்.எஸ்.பாலாம்பிகை. இவர் வேலூரில் ஹோலிக்கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்தவர்.

ஆங்கிலம் தவிர எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆங்கிலத்தில்மாநில அளவில் முதலிடம் பெற்றது எதிர்பாராத பரிசு என்றும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ப்ளஸ் டூ தேர்வில் தாவரவியலில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் ஈரோடு பாரதிய வித்யாபவன் மாணவர்மதுசங்கர். இவர் டாக்டராக விரும்புகிறேன் என்று கூறினார். இவர் தாவரவியலில் பெற்ற மதிப்பெண்கள் 200 க்கு199.

பேப்பரில் பெயர் வர படித்த தேவிபாலா:

திருச்சி சாவித்திரி வித்யசாலா பள்ளியில் படித்த மாணவி தேவிபாலா விஞ்ஞானத்தில் மாநில அளவில்முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

நான் ப்ளஸ் டூ தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக டிவி பார்க்காமல் எல்லாம் படிக்கவில்லை. ஆனால்பேப்பரில் பெயர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

பேப்பரில் எனது பெயரைப் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று நிருபர்களிடம் கூறினார்.

பரமக்குடி டான்பாஸ்கோ பள்ளியில் படித்த சிவகங்கையைச் சேர்ந்த மாணவி நர்மதா விலங்கியலில் முதலிடம்பெற்றுள்ளார். இவர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மருத்துவம் படிக்க விரும்புவதாகத்தெரிவித்தார்.

காப்பி "கேட்ஸ் 550:

ப்ளஸ் டூ தேர்வில் 550 மாணவ மாணவிகள் தேர்வில் காப்பியடித்தது தொடர்பாக பிடிபட்டனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான மாணவர்களே தேர்வில் காப்பியடித்தது தொடர்பாக பிடிபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X