தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகத்துக்கு , மேற்கு வங்கம் தந்திருக்கும் மற்றுமொரு சீதனம்..காதல் கொஞ்சும் விழிகள்..சங்காக செவிகள்..செதுக்கிவைத்தசிற்பமாய்..பார்த்தவர்கள்..தங்களது மனதில் அள்ளி வைத்துக்கொள்கின்ற அழகு ஒவியம்..ஜெயாசீல்.

"பெண்ணின் மனசைத்தொட்டு படத்தின் ஹீரோயின். தெத்துபற்கள் தெரிய..சிவந்த உதடுகளை மெதுவாக பிரித்து அவர் பேசப்பேச..மறுபேச்சில்லாமல்..குறித்துவைத்து எழுத ஆரம்பித்தோம்..அது அப்படியே இங்கே உங்களுக்காக..

சிறு வயது முதலே, நாடக மேடையில் நடித்த அனுபவம் உண்டு..(நீங்க நடிக்க வேண்டாம்..திரையில் வந்தாலே போதும்..ம்ம்.. அப்புறம்?) இருபத்துக்கும்அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

சன்ரைஸ் காப்பி, ரியல் புரூட் ஜூஸ், ஸ்பென்ஸர் டீ உள்பட இருபதுக்கும் அதிகமான விளம்பரப் படங்கள்..சினிமாவில் சான்ஸ் கிடைக்க இவைகள் முக்கியகாரணம்..என்று நன்றியுடன் குறிப்பிடுபவர், கூடவே...சிம்ரனை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய..முனுசாமி சார்தான் என்னையும் இங்கேஅறிமுகப்படுத்தினார் என்கிறார். (மிஸ்டர் முனுசாமி .. வாழ்க உங்கள் அறிமுகப்பணி..)

நடனம் பிடிக்கும்.. பரதநாட்டியம் முறைப்படி கற்றிருக்கிறேன்...இருந்தாலும் இன்னும் நாட்டிய அரங்கேற்றம் செய்யவில்லை..(நோ பீலிங்ஸ்..தமிழ்த்திரையுலகம் உங்களுக்காக காத்திருக்கிறது).

இந்தியில், மணிஷங்கர் இயக்கத்தில்.. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஒரு படத்திலும்.. தில் ஹே குல் ஆஸ்மா என்கிற இன்னொரு படத்திலும் , நடித்திருப்பதாகசொல்லும் சீல்..அந்த இரண்டு படங்களும் என்ன காரணத்தினாலோ இன்னும் ரிலீஸாகவில்லை என்கிறார். (ஹிந்தி திரையுலகத்திற்கு, உங்க அறிமுகபாக்கியம் கிடைக்கலீங்க..அப்புறம்.)

பிறந்தது.. ஜனவரி மாதம் 10-ம் தேதி ..(வருஷம்..வருஷம்..) அது மட்டும் நோ..என்கிறார்.

மருத்துவக்கல்லூரி மாணவியாக "பெண்ணின் மனதைத்தொட்டு" படத்தில் திடிக்கும் ஜெயாசீல்..கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால்.. கவர்ச்சியாகவும்நடிப்பேன் என்கிறார்.. (ஹையோ டா..)

சாய் பாபாவின் தீவிர பக்தை.. இனிதான் அவரை நேரில் தரிசிக்க வேண்டும். அப்புறம்..காப்பி , டீ குடிக்கும் பழக்கம் கிடையாது. (அப்படிப்போடுங்க..உங்களைப் பார்த்தாலே..எங்களுக்குக் காப்பி குடிக்கிற நாபகம் தான் வருது..அதுக்கு என்ன செய்யறது).

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற