தமிழகத்தில் இன்று
இந்தியாவுக்கான தொலைபேசிக் கட்டணத்தைக் குறைத்தது யு.ஏ.இ
துபாய்:
இந்தியா உள்பட 36 நாடுகளுக்கான வெளிநாட்டுத் தொலைபேசிக் கட்டணத்தை (ஐ.எஸ்.டி.) ஐக்கிய அரசுக் குடியரசு குறைத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபுக் குடியரசின் இந்த அறிவிப்பால் அங்கு வாழும் சுமார் 10 லட்சம்இந்தியர்கள் பயனடைவார்கள்.
வெளிநாட்டுத் தொலைபேசிக் கட்டணம் மட்டுமல்ல செல்போன் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொலைபேசிக்குக் கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இந்தியா தவிர இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்பட 36 நாடுகளுக்கான வெளிநாட்டுத் தொலைபேசிக் கட்டணத்தை ஐக்கிய அரபுக் குடியரசுகுறைத்துக் கொண்டுள்ளது.
தொலைபேசி சந்தாதாரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளிக்கும் முடிவில் கட்டணத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபுக்குடியரசின் தொலைபேசித் துறை தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!