For Daily Alerts
தமிழகத்தில் இன்று
உள்ளாட்சித் தேர்தலில் 5 இடங்களில் தி.மு.க வெற்றி
கோவை:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் தி.மு.க.,5 இடங்களிலும்,அ.தி.மு.க.,3 இடங்களிலும், த.மா.கா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கோவையில், கோட்டூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளில் இரண்டு வார்டுகளில் நடந்த தேர்தலில் த.மா.காவெற்றி பெற்றுள்ளது. பூலுவாபட்டி, பேரூராட்சியில் 3 வார்டுகளில் இரண்டில் அ.தி.மு.க.வும், ஒன்றில்த.மா.கா,வும் வெற்றி பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் நகராட்சி 29 வது வார்டு, ஈரோடு மாவட்டம் ஆப்பக் கூடல் பேரூராட்சி, சிவகிரி 14வது வார்டு, பெரிய சேர் 10வது வார்டு, ஆகிய இடங்களில் தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!