For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காவிரிப் பிரச்சனைக்காக போராடியவரா வீரப்பன்?"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தன-ஆள் கடத்தல் வீரப்பன் இப்போது 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசின் முன் வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளுக்காகஎப்போதாவது அவர் பேராடியிருக்கிறாரா? என என தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுள்ளது.

பாரதியஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஏற்காட்டில் நடந்தது. கூட்டதிற்கு மாநிலத் தவைர் கிருபாநிதி தலைமை தாங்கினார். மாநிலப்பொதுச் செயலாளர்கள் இல.கணேசன், எச்.டி.ராஜா, ஜி.கே . வேலாயுதம், முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன் , மாநிலச் செயலாளர்கள்வேலாயுதம் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

கன்னட சினிமா நடிகர் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு முன் பலமுறை காவல்துறைஅதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பாவி மக்கள் கடத்தப்பட்டு இதுவரை 130 க்கும் மேற்பட்டவர்கள் வீரப்பனால்கொல்லப்பட்டுள்ளனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜ்குமாரை மீட்பதுதான் , மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முன் உள்ள சவால். சூழ்நிலையை புரிந்துகொண்டு தமிழகமற்றும் கர்நாடக முதல்வர்கள் செயல்படுவதை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு பாராட்டுகிறது.

அதே நேரத்தில், இக்கடத்தல் சம்பவத்தின் தொடர்பாக வீரப்பன் சில கோரிக்கைகளை வைப்பதும் அதற்கு அரசாங்கம் பதில் அளிப்பதும் போன்ற நிலைஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கியுள்ளது.

வீரப்பனால் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கோரிக்கைகள் எத்தகையது என்று எண்ணிப்பார்த்து அரசு முடிவு எடுக்கக்கூடாது.எந்த ஒரு நியாயமானகோரிக்கைகளையும் கூட வலியுறுத்த பல நல்ல வழிமுறைகள் உள்ளன.

ஒருவரை கடத்தி வைத்துக்கொண்டு தனது கோரிக்கைகளை ஏற்காவிடில் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதை எந்த அரசும்ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இப்பொழுது தான் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்காக இதுவரை வீரப்பன் தனது வாழ்வில் போராடியதாகவும்கூற முடியாது.

காவிரிப் பிரச்சனைக்கு பிரதமர் ஒரு சுமூகமாக தீர்வினை கண்டதன் மூலம் கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் கன்னடர்களுக்குமிடையேஇருந்து வந்த மனக்கசப்பு குறைந்துள்ளது.

ஆனால் வீரப்பனின் இக் கடத்தல் சம்பவத்தின் பின் விளைவாக பெங்களூரில் உள்ள தமிழ் பத்திரிக்கை அலுவலகங்கள், தமிழர்களது வாகனங்கள் மற்றும்சொத்துக்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜ்குமார் உறவினர்களது கோரிக்கையின் காரணமாகவும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள்மூலமாகவும் சூழ்நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் வீரப்பனே பொதுமன்னிப்பு பற்றி கோரிக்கை வைக்காத போது அதுபற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லைஎன தமிழக பாரதீய ஜனதா கட்சி கருதுகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X