For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யானையின் அட்டகாசத்தால் வானில் 30 நிமிஷம் வட்டமடித்த விமானம்

By Staff
Google Oneindia Tamil News

கவுஹாத்தி:

கவுஹாத்தி விமானநிலையத்திலுள்ள ரன்வேயில் யானை ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் ரகளையில் ஈடுபட்டது. இந்தச் சம்பவத்தால்கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் அரைமணி நேரம் வானிலேயே வட்டமடித்தது.

இதுகுறித்து விமானநிலைய ஆணைய இயக்குநர் லீலா போரா கூறியதாவது:

கல்கத்தாவிலிருந்து 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கவுஹாத்தி வந்தது. அந்த விமானம் கவுஹாத்தியிலுள்ள லோகப்பிரியாசர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டும்.

ஆனால், விமானநிலையத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பையும் மீறி, அங்கு நுழைந்த மதம் பிடித்த யானை ஒன்று தாறுமாறாக ஓடி கலாட்டா செய்தது.இதனால் விமானத்தைத் தரையிறக்க வேண்டாம் என்று பைலட்டிடம் தகவல் கொடுத்தோம்.

இதனால் விமானம் தரையிங்க முடியாமல் வானிலேயே நகர் முழுவதும் அரைமணிநேரம் வட்டமடித்தது. அதற்குப்பின் வனஇலாகாத் துறையினரும்,போலீஸாரும் விமானநிலையப் பகுதியில் பட்டாசுகளை வெடித்தனர். அதற்குப்பின் அப்பகுதியிலிருந்து யானை நகர்ந்து சென்றது.

தற்போது விமானநிலையத்தில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவுஹாத்தி விமானநிலையத்தில் மதம் பிடித்த யானை கலாட்டா செய்வது இதுவேமுதல்முறை. இதுபோல் எதிர்காலத்தில் சம்பவங்கள் ஏற்படக் கூடாது என்பதில் விமானத்துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்என்றார்.

இதுகுறித்து உயர்போலீஸ் அதிகாரி அனில் செளத்ரி கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் காட்டிலிருந்து தப்பித்து வந்த இந்த யானை தேசியநெடுஞ்சாலையில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. அதற்குப்பின் இந்த யானை எப்படியோ வெள்ளிக்கிழமை அதிகாலை விமானநிலையத்துக்குள்நுழைந்திருக்கிறது.

கடந்த இரண்டு வருடமாக அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதுவரை 3 மில்லியன் வரைபொருட்கள் சேதமடைந்துள்ளன. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை 100 பேர் யானைகள் மிதித்து இறந்துள்ளனர்.

மேலும், கடந்த மாதம் அசாமில் காட்டிலிருந்து தப்பித்து வந்த மதம் பிடித்த யானை நடுரோட்டில் அட்டகாசம் செய்தது. இதனால் காலைவேளையில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில ஆட்டோக்கள் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X