For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்: விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் (பாராலிம்பிக்) சிட்னியில் இம்மாதம் 18-ம் தேதி தொடங்குகின்றன.

இந்த ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டுகள் அமோகமாக விற்பனையாகியுள்ளன.கடந்த முறை அட்லாண்டாவில் நடந்த பாராலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்விற்பனையை விட இரு மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

சிட்னியில் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை 12 நாள் இந்தபாராலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 20 போட்டிப் பிரிவுகளில்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள்கலந்து கொள்கின்றனர்.

சிட்னி பாராலிம்பிக் போட்டிக்கு இதுவரை 8.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைஆகியுள்ளன. ஆனால், அட்லாண்டா பாராலிம்பிக் போட்டியில் 5 லட்சம்டிக்கெட்டுகள்தான் விற்பனை ஆகின.

அதேபோல் 18-ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவுக்கான ஒரு லட்சம்டிக்கெட்டுகளும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. 29-ம் தேதி நடைபெறும்நிறைவு நாள் விழாவுக்கான டிக்கெட்டுகளில் இன்னும் 1000 டிக்கெட்டுகளேஎஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X