For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பாக். அணியில் 4 ஸ்பின்னர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கராச்சி:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கானபாகிஸ்தான அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம்மேற்கொள்ள உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் போட்டியுடன் போட்டித்தொடர் தொடங்குகிறது.

3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும்மோதுகின்றன. இப் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணிஅறிவிக்கப்பட்டது.

இதில் ஷாஹிக் அபிரிதி, முஷ்டாக் அகமது, சக்லைன் முஷ்டாக், ஷோயிப் மாலிக்ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மோயின் கான் கேப்டனாகவும்,இன்சமாம் உல்-ஹக் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் எதிர்ப்பைச் சமாளிக்கவும், தொடக்கப் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காகவும் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில்சேர்த்துள்ளோம் என்று அணி தேர்வுக் குழுத் தலைவர் வாஸிம் பாரி தெரிவித்தார்.

கடைசியாக 1987-ம் ஆண்டுதான் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணிவந்தது. அந்த டெஸ்ட் போட்டித் தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வென்றது.அப் போட்டித் தொடரில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் சிறப்பாகவிளையாடினார்.

அவர் மொத்தம் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோன்ற ஒரு சிறந்த தொடராகஇத் தொடர் இருப்பதற்காகவே அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களைச்சேர்த்துள்ளோம். நிச்சயம் அவர்கள் சாதிப்பாளர்கள் என்ற நம்புவதாக அணி கேப்டன்மோயின் கான் தெரிவித்தார்.

1987-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங்குக்கும்,பாகிஸ்தான் அம்பயர் ஷக்கூர் ரானாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:

மோயின் கான், இன்சமாம்-உல்-ஹக், சயீத் அன்வர், சலீம் இலாஹி, இம்ரான் நசீர்,ஷாகித் அபிரிதி, யூசுப் யுகானா, ஃபெய்சல் இக்பால், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்,அப்துர் ரசாக், அசார் மெஹ்மூத், சக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமத், ஷோயிப்மாலிக்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X