For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரோர்பதிகளை கடத்த தாவூத் கும்பல் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஸ்டார் பிளஸ் டிவில் பிரபலமடைந்துள்ள கோன் பனேகா கரோர்பதி (யார்கோடீஸ்வரன் ஆகப் போகிறார்கள்?) நிகழ்ச்சியில் அதிக பரிசுப் பணத்தைவெல்பவர்களைக் கடத்த தாதா தாவூத் இப்ராகிம் கும்பல் திட்டமிட்டிருப்பதுதெரியவந்துள்ளது.

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ஸ்டார் பிளஸ் டிவியில்ஒளிபரப்பாகும் ஹிந்தி நடிகர் அபிதாப்பச்சன் நடத்தும் கோன் பனேகாகரோர்பதியில்தான் அதிக பரிசுப் பணம் வழங்கப்படுகிறது.

அப் போட்டியில் வெல்பவருக்கு ரூ. 1 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் ரூ. 1 கோடி பரிசைவென்றார்.

இந் நிலையில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல், கோன்பனேகா கரோர்பதி நிகழ்ச்சியில் அதிக பரிசுப் பணத்தை வெல்லும் நபர்களைக் கடத்திச்சென்று பணம் பறிக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் சுபாஷ்பாத்ரா சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது அவரை ஒருகும்பல் கடத்திச் சென்றது. அவரை விடுவிக்க ரூ. 2 கோடியைக் கேட்டது.

ஆனால், டெல்லி போலீஸார் தீவிரமாகச் செயல்பட்டு கடத்தல்காரர்களிடமிருந்துசுபாஷ் பாத்ராவை பத்திரமாக மீட்டனர். போலீஸ் விசாரணையில் அவர் பலஅதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்தார்.

விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவர் தலைமையில் அந்த கடத்தல்கும்பல் செயல்படுகிறது. இக் கும்பலுக்கு மும்பையின் மாஃபியா கும்பல் தலைவர்தாவூத் இப்ராஹிம் உதவியாக உள்ளார்.

இக் கும்பல் கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியில் அதிக பரிசுப் பணத்தை வெல்லும்நபர்களைக் கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது. என்னைக் கடத்திவைத்திருந்தபோது அவர்களது இத் திட்டம் எனக்கு தெரியவந்தது என்று சுபாஷ்பாத்ரா தெரிவித்தார்.

இன்டர்நெட் லாட்டரியில் ரூ. 46 கோடி:

இது ஒரு பக்கம் இருக்க இன்டர்நெட் மூலம் நடத்தப்பட்ட லாட்டரியில் டெல்லிநாடாளுமன்றத்தில் அரசு நிருபராகப் பணியாற்றும் முகம்மது கரீம் பாஷா எபவருக்குரூ. 46 கோடி பரிசுப் பணம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரீலோட்டோ.காம் என்ற நிறுவனம் இன்டர்நெட் மூலம்இலவச லாட்டரிப் போட்டியை நடத்தி வருகிறது. இதில் யார் வேண்டுமானாலும்கலந்து கொள்ளலாம்.

கடந்த வாரம் இந் நிறுவனம் நடத்திய போட்டியில் பங்கு கொண்ட முகம்மது கரீம்பாஷாவுக்கு ரூ.46 கோடி பரிசுப் பணம் கிடைத்துள்ளது. இப் பரிசுத் தொகை அடுத்த30 ஆண்டுகளில் பல தவணைகளாக அவருக்கு வழங்கப்படும்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த முகம்மது கரீம் பாஷா, கடந்த 7 மாதங்களாகதினமும் இன்டர்நெட்டில் 2 மணி நேரங்களைச் செலவிட்டார். பல்வேறுவெட்சைட்டுகளைப் பார்வையிட்ட அவர் விளையாட்டாகவே இப் பரிசுப்போட்டியில் கலந்து கொண்டார்.

பரிசுப் பணத்தில் முதல் தவணை கிடைத்தவுடன் கடன்கள் முழுவதையும்அடைப்பேன். புதிய கார் வாங்குவேன். மகனுக்கு விளம்பர ஏஜென்சி வைத்துத்தருவேன். புனித ஹஜ் யாத்திரை செல்வேன். பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம்செய்வேன். பேரன்களை ஐ.ஐ.டி.யில் படிக்க வைப்பேன் என்றார் முகம்மது கரீம்பாஷா.

இனி இந்த திடீர் குரோர்பதிகளை (கோடீஸ்வரன்கள்) தாதா கும்பலிடமிருந்துகாப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீஸ் தலையில் விழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X