டான்சி தீர்ப்பு: ஐ.ஏ.எஸ். அதிகாரி அப்பீல்
சென்னை:
டான்சி நில பேர ஊழலில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.கற்பூரசுந்தரபாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமைஅப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அரசுக்குகோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிசலா, கற்பூரசுந்தரபாண்டியன் உள்பட பலர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டது.
இவ் வழக்கில் விசாரணை முடிந்து அக்டோபர் 9-ம் தேதி நீதிபதி பி. அன்பழகன்தீர்ப்பளித்தார். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் 3 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
இந் நிலையில், இத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கற்பூரசுந்தரபாண்டியன் திங்கள்கிழமை அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கற்பூரசுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது:
இவ் வழக்கு தொடர்பாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் எனதுபெயர் இல்லை. ஆனால், குற்றப்பத்திரிக்கையில்தான் எனது பெயர்சேர்க்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் கமிஷன் பெற்றது தொடர்பாக எந்த சாட்சியும் சாட்சியம்அளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது சாட்சிகளின் சாட்சியங்களை சரியாகமதிப்பிடாமல் இவ் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யவேண்டும். இப்போது நான்தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீது தீர்ப்பு வரும்வரை சிறப்பு நீதிமன்றம் விதித்ததண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தனது அப்பீல் மனுவில்கற்பூரசுந்தரபாண்டியன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!