For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க வைக் கலங்க வைக்கும் புலி விவகாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஹைதராபாத் மிருகக் காட்சி சாலையில் புலி கொல்லப்பட்டதற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாசெவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புலி விவகாரம் குறித்து ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திங்கள்கிழமை காலை சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்: திடுக்கிட்டுப் போனேன். சொல்லொண்ணா வேதனைஅடைந்தேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் புலி ஒன்று கொல்லப்பட்டது குறித்த சர்ச்சையில் என்னைச்சம்பந்தப்படுத்துவது உள்ள நோக்கமுடைய அநாகரிகச் செயல் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வழக்குகளில் இருந்து நான் விடுபடுவதற்காக சுதாகரன் நடத்தியதாகக் கூறப்படும் யாகத்திற்காக புலி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள்என்னை என்றும் இல்லாத மன வருத்தத்திற்கு ஆளாக்கி விட்டது.

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. பல கோயில்களுக்கு நேரிடையாகச் சென்று வெளிப்படையாக வழிபாடு நடத்துவதும் உண்டு.

சமீபத்தில் பிரித்தியங்கரா தேவி ஆலயத்திற்குச் சென்றும் வழிபட்டேன். இங்கு வளர்க்கப்பட்ட யாகத்தில் மிளகாய் மற்றும் பழங்களும் தானியங்களும் தான்போடப்பட்டன.

நான் கடவுளை வழிபடுவதிலும், பூஜைகள் செய்வதிலும் எந்தத் திரை மறைவு ரகசியங்களையும் வைத்துக் கொள்வதில்லை. மர்மங்களும் இல்லை. சிலபத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பது போல், இப்படி திருட்டுத்தனம் செய்து வன விலங்குகளைக் கொல்லும் ஈனச் செயல்கள் மீது எனக்கு எப்பொழுதும்நம்பிக்கையில்லை.

விலங்குகள் மீது பேரன்பு:

பொதுவாக எல்லா விலங்குகள் மீதும் எனக்கு பேரன்பு உண்டு. குறிப்பாக வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறைஎப்பொழுதும் உண்டு. அழிந்து வரும் வன விலங்குகளைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

நான் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேலாக என்னோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒருவர் யாகம்நடத்தினார் என்பது கேழ்வரகில் நெய் வடிகின்ற கதையாகத்தான் உள்ளது.

என் இல்லத்திலிருந்து 1996-ல் சுதாகரன் வெளியேற்றப்பட்ட பிறகு சுதாகரனோடு எவ்விதத் தொடர்பும் இல்லை. தொடர்பு உள்ளதாகஅவ்வப்பொழுது சுதாகரன் கழக உடன் பிறப்புகளை நம்ப வைக்கச் செய்யும் முயற்சிகளையும் நான் அறிக்கை மூலம் திட்டவட்டமாக மறுத்தும்வந்திருக்கிறேன்.

சுதாகரோடு தொடர்பு கொள்ளும் கழக உடன்பிறப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளேன். இந்த நிலையில் நான் உறுதியானநிலைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றேன். கடந்த நாலரை ஆண்டுகளாக நான் முகத்தில் கூட விழிக்க விரும்பாத ஒரு நபர் அப்படி ஒரு யாகம் நடத்தியதுஉண்மையானால் அதை விசாரணை செய்து வரும் ஆந்திர போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் வாராங்கலில் ஒரு பத்திரகாளி கோயில் உள்ளதா ? என்பது கூட எனக்குத் தெரியாது. பூஜை நடத்துவதற்கு எந்த ஒருஉயிரையும் பலியிடுவதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். இந்த நிலையில், புலியைக்கொன்று யாகம் நடத்தும் மூட நிம்பிக்கை எனக்கு அறவேகிடையாது.

சுதாகரன் கொடுத்து வரும் விளம்பரங்களையும், எனக்கு எதிராக செயல்படுவதையும், தன்னையே வருங்கால முதல்வர் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதையும், பத்திரிகையாளர்கள் அறிய மாட்டார்களா?

அப்படி ஏதாவது யாகம் நடத்தி இருந்தால் அந்த நபர் தனக்காகத்தான் நடத்தியிருப்பார் என்பதைக் கூட அறியாமல் என்னை வம்புக்கு இழுக்கலாமா?

விபரீதமான செய்திகளை வெளியிட்டு என்னை வேதனைப்படுத்துவது நியாயமா? தேவையில்லாமல் எனக்குத் தீராத மன உளைச்சலையும், மாறாதவேதனையும் அதிர்ச்சியையும் அளிப்பது ஏன்?

உண்மைக்குப் புறம்பான செய்திகளில் என்னைச் சம்பந்தப்படுத்துவதை அறிந்து மிகவும் துயரம் அடைகிறேன். என்னை இழிவுபடுத்தும் இந்தச் செய்தியைவெளியிட்ட பத்திரிகைகள் மீது கிரிமினல் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.

என் வீட்டில் ஒரு காலத்தில் இருந்தவர் என்பதற்காக , அந்த நபர் செய்ததாகச் சொல்லப்படும் செயலில் என்னையும் தொடர்பு படுத்துவது திட்டமிட்ட சதிஉள்நோக்கத்தோடு பரப்பப்படும் வதந்தி என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐதராபாத் மிருகக்காட்சி சாலையில் புலி கொல்லப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கொடுஞ் செயலில் யார்சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தகுந்த கடுமையானர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுவாகச் சொல்லப்போனால் தமிழக அரசியல் களம் புலி ரூபத்தில் விஸ்பரூபம் எடுத்திருக்கிறது. தி.மு.க விடுதலைப்புலி விவகாரத்தில்தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது என்றால், அ.தி.மு.க வுக்கு நிஜப்புலி தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை வெளியான ஒரு நாளிதழில் வந்த செய்தி பலரையும் பதறச் செய்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடும் கோபத்தில்இருக்கிறார்.

ஜெ. பூஜைக்காக புலி நரபலி?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X