• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவை சாமியாரின் பிரமிடு சாதனை

By Staff
|

கோவை:

பூட்டிய அறைக்குள் 21 நாள் உணவின்றி இருந்து சாதனை படைத்துள்ளார் வராஹி சுவாமி. மனதில்உறுதியிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறார் இவர்.

கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் வராஹி சுவாமி. இந்த சாமியார் வராஹி மந்திராலயம் என்ற தியானமண்டபத்தை தடத்தி வருகிறார்.

இருந்தாலும் கோவை பெர்க்ஸ் பள்ளியில் உள்ள பிரமிடு தியான மண்டபத்தில் தவம் இருப்பது வழக்கம். பெர்க்ஸ்பள்ளியில் அதன் தாளாளர் ராமரங்கநாதன் பிரமிடு ஆராய்ச்சியாக கட்டியுள்ளார். இந்த பிரமிடுகளில்அபரிமிதமான சக்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பிரமிடு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 24 மணி நேரம் திறந்தே இருக்கும். இங்கு தவம், தியானம்போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிரமிடிற்குள் 21 நாட்கள் உணவின்றி தியானம் செய்ய வராஹி சுவாமிகள் முடிவு செய்தார்.இதன்படி கடந்த டிசம்பர் 7ம் தேதியில் வராஹி முனிவர் உள்ளே சென்ற பின்னர் பிரமிடுகளின் கதவுபூட்டப்பட்டது.

இந்த 21 நாள் விரத நிகழ்ச்சி குறித்து வராஹி சுவாமி கூறியதாவது:

தியான சக்தியால் எதையும் சாதிக்க முடியும். இதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். நான் கடந்த 9வருடங்களாக ஆன்மீக பணியில் இருந்து வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்ததன் விளைவாக நான்21 நாட்கள் பட்டினியாக இருக்க முடிந்தது.

இந்த 21 நாளில் நான் 21 மினரல் வாட்டர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை மட்டுமே குடித்துள்ளேன். தினம் நான்வணங்கி வரும் வராஹி தேவியைப் பூச்சித்து தர்ப்பைப் புல் விரித்து அதில் அமர்ந்திருந்தேன்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 56 நாட்கள் பட்டினி தவம் இருந்துள்ளேன். இது சாதனைஅல்ல. நாம் நினைக்கும் பொருட்களை மனதில் அரை மணி நேரம் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்துவதுதியானம். அதையே மணிக்கணக்கில் நிறுத்தினால் நரம்புகள் மற்றும் உடல் நமது வயப்பட்டு விடும். இந்த தியானசக்தியால் நமது உடலில் சக்தி சேமிக்கப்படுகிறது.

இதனால் பல தீர்க்கமுடியாத பிரச்னைகளை தீர்வு காண முடியும். தன்னம்பிக்கை என்பது இறைவன் கொடுத்தபொக்கிஷம். இதனை முறையாகப் பயன்படுத்தினால் எந்தக் காரியத்திலும் வெற்றி பெறலாம்.

நான் சாவதற்கு முன்பாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தில் ஆற்றோரத்தில் ஒரு சமாதி கட்டஉள்ளேன். இதில் ஒரு ஆண்டிற்கு தங்க உள்ளேன். இந்த கல்லறையிலிருந்து ஒரு ஆண்டு கழித்து நான் வெளியேவரவில்லை என்றால் அப்படியே சமாதியை மூடி விடலாம்.

தாயை விட சிறந்த தெய்வம் இல்லை எனக் கூறும் இவரை, அவரது தாயார் தான் 21 நாட்களுக்கு பிறகுபிரமிடிலிருந்து அழைத்து வந்தார்

21 நாட்கள் பட்டினியிருந்த இவரது உடலை டாக்டர் பக்தவத்சலம் பரிசோதனை செய்து நல்ல முறையில்இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X