For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவியல் குவியலாக சடலங்கள்

By Staff
Google Oneindia Tamil News

அஹமதாபாத்:

குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பிடியில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 மாக உயர்ந்துள்ளது.

இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சனிக்கிழமை காலை மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டு வெட்டவெளியில் கூடாரமிட்டுத் தங்கியுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தங்கள்வீடுகளுக்குச் செல்லப் பயப்படுகின்றனர்.

இந்தப் பாதிப்பிலிருந்து குஜராத் மாநிலம் மீள இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறை அமைச்சர் ஹரன் பாண்டியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்த பயங்கர சம்பவத்தில் இதுவரை 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எவ்வளவு பேர் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர் என்றுதெரியவில்லை. தோண்டும் இடமெல்லாம் பிணங்கள் கிடக்கிறது. இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கிடையில் உயிருடன் தவித்துக் கொண்டிருப்பவர்களை மீட்கும்பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணியில் சி.ஆர்.பி.எஃப், ராணுவத்தின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். புல்டோசர் மிஷின்கள், கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குவியல், குவியலாகப் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும், அவர்களது உறவினர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது.

10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பச்சாவ் நகரமும், 15 ஆயிரத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ரப்பார் நகரமும் பெரும் அழிவைச்சந்தித்துள்ளன. இடிபாடுகளை அகற்றும் போது பலியானவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கைத் தாண்டும் என்று தெரிகிறது.

பூகம்பத்தில் சிக்கி சேதமடைந்துள்ள குஜராத் மாநிலத்தின் நிவாரணப்பணிக்காக உடனடியாக ரூ 500 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X