For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் கதி என்ன?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களின் நிலை என்ன ஆனது என்பது குழப்பமாக உள்ளது.

பூகம்பத்தால் குஜராத் மாநிலமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் வாழும் தமிழர்களின் உறவினர்கள் பெரும்கவலை அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குஜராத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் குஜராத்தில்தகவல்தொடர்பு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வாழும் தங்கள் உறவினர்களைக் காணச் செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் விட ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு ரயில் சென்னையிலிருந்து குஜராத்துக்குச் சென்றது. இதில் 420 பயணிகள் சென்றனர். ரயில் அகமதாபாத் சென்றதும்,அவர்கள் தங்கள் உறவினர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

குஜராத் மாநிலத்திற்குச் செல்வதற்காக ரயிலில் சென்றவர்கள் கதறி அழுத காட்சி மனதைக் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது.

குஜராத் மாநிலத்தில் வசிக்கும் தன் மகன் மணியைக் (22) காண சென்ற உமா (55) என்பவர் கூறுகையில், என் மகன் மணி அகமதாபாத்தில் உள்ளதனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மணி எனக்கு மாதாமாதம் பணம் அனுப்பித் தருவார். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅம்மா எப்படி இருக்கிறாய்? என்று கேட்டு போன் செய்வார்.

ஆனால், வெள்ளிக்கிழமை அகமாதாபாத்தில் பூகம்பம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் எனக்கு இதயமே நின்று விட்டது.நான் எஸ்.டி.டி. பண்ண முயற்சித்தேன். ஆனால் அங்கு தகவல் தொடர்பு இல்லை. என் மகனைப் பார்க்க வேண்டும் என்பதால் எனது சகோதரியின் மகன்தணிகாசலத்துடன் அகமதாபாத் சென்று கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

பூஜ் நகரில் ராணுவ வீரராக இருக்கும் ராஜா (33) என்பவரை சந்திப்பதற்காக குஜராத் செல்லும் அவரது மனைவி சத்யவாணி (28) கூறுகையில், என்கணவர் நாட்டுப்பற்று மிக்கவர். அவர் எப்போதும் நாட்டைப்பற்றி மட்டும்தான் பேசுவார். அவர் பூஜ் நகரில்தான் ராணுவ வீரராகப் பணிபுரிந்துவருகிறார். அவர் உயிருடன் இருக்கிறாரார? இல்லையா? என்று தெரியவில்லை. அவரைக் காண்பதற்காக நான் பூஜ் செல்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X