For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி விவகாரம்... ராவ் பல்டி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டித்தரப்படும் என்று தான் கூறவில்லை என்கிறார் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்து வரும் லிபரான் கமிஷன் விசாரணையின் போது இதனை தெரிவித்த ராவ், இடிக்கப்பட்ட மசூதிக்கு பதில் மசூதிகட்டித்தரப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போதும் அக்கருத்தே வலியுறுத்தப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு செல்ல விரும்பிய அர்ஜுன் சிங்கை பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பவில்லை. மத்திய உள்துறையும், பிரதமர்அலுவலகமும் இணைந்து பாபர் மசூதி இடிப்பு பற்றி வெள்ளை அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருந்த கட்டிடத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு எடுத்திருந்தது. மத்தியஉள்துறை செயலர் மசூதி இடிக்கப்பட்ட அன்று நடைபெற்ற சம்பவங்கள் பற்றி உடனுக்குடன் தெரிவித்து வந்தார்.

பகல் 12 மணிக்கு மசூதிக்குள் 150 கரசேவகர்கள் நுழைந்தது பற்றிய தகவல் உடனே கிடைத்தது உண்மை. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதாக வந்ததகவல் மாலை 3 அல்லது 4 மணியாக இருக்கும். அதன் பின் நடைபெற்ற காபினெட் கூட்டத்தில் உ.பி.யில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

பைஸாபாத்தில் இருந்து ராணுவம் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது என உள்துறை செயலர் தெரிவித்தார். ஆனால், ராணுவம் சம்பவஇடத்திற்கு சென்ற நாள் பற்றி அயோத்தி வெள்ளை அறிக்கையில் இருக்கிறது என பட்டும் படாமலும் ராவ் பதிலளித்தார்.

ஏனெனில, சம்பவம் நடைபெற்றது டிசம்பர் 6ம் தேதி, ஆனால் ராணுவம் அங்கு சென்றது டிசம்பர் 7ம் தேதி. முதலில் சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவம்மாஜிஸ்டிரேட் வந்த பின் பாசறைக்கு திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லா அமைச்சகங்களையும் ஒருங்கிணைக்கும் பிரதமர் அலுவலகமே மசூதி இடிப்பிற்கு முன் ஜூலை,1992ல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைநடத்தி வந்தது என லிபரான் விசாரணைக் கமிஷன் கேள்வி ஒன்றிற்கு ராவ் பதிலளித்தார்.

தேசீய பாதுகாப்புக்குழு, மசூதியை காப்பாற்றும் பொறுப்பை பிரதமரிடம் அளித்திருந்தது. அதனை காப்பாற்ற தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு,பிரதமர் அலுவலக செயலர் நரேஷ் சந்திர, உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், அப்போதைய உ.பி. அரசு ஆகியோரை காரணம் காட்டி விட்டார் ராவ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X