For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சியாட்டிலில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சியாட்டில் (அமெரிக்கா):

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் 6.8 என்ற ரிக்டர் அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்நிலநடுக்கம் 45 வினாடிகள் நீடித்தது.

திடீரென்று ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், வீடுகள், அரசு, தனியார் அலுவலகங்களில்மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட ஆரம்பித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரை மீட்புப்படையினர்மீட்டனர்.

சியாட்டிலில் நள்ளிரவு 1.55 மணிக்கு நிவநடுக்கம் ஏற்பட்டது. இதே போல் வான்கூவர், போர்ட்லேன்ட், ஓர்க்ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கொலராடோவில் முதலில் 7.0என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. கொலராடோவைச் சுற்றி50 கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் வீடுகள், அலுவலகங்களில் சேதம் ஏற்பட்டது.

பில்கேட்ஸ் அலுவலகத்தில் நிலநடுக்கம்:

சாப்ட்வேர் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் பில்கேட்ஸ் அலுவலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.அப்போது அந்த அலுவலகத்தின் கேன்டீனில் அமர்ந்திருந்த 30 பேர் நிலைதடுமாறி விழுந்தனர். பின்னர் அவர்கள்மீட்கப்பட்டனர்.

மேயர் கருத்து:

சியாட்டில் மேயர் பால் ஸ்கவுல் கூறுகையில், இது மிகப் பெரிய நிலநடுக்கமாகும். திடீரென்று நிலநடுக்கம் ஏற்படும்என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது எனத்தெரிகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.

இருப்பினும் இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கடந்த 36 வருடங்களில்சியாட்டிலில் நிலநடுக்கம் ஏற்படுவது இதுவே முதல்முறை.

1965 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ம் தேதி 6.5 என்ற ரிக்டர் அளவில் சியாட்டிலில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதற்குமுன் 1949 ம் ஆண்டு 7.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஹார்போரோவியூ மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், நிலநடுக்கத்தால் காயமடைந்த 12 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றனர். இருப்பினும் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மெர்ஸர் தீவில் வசித்து வரும் மரியா அக்காலே (62) என்பவர் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள்எங்கள் வீட்டு ஹாலில் இருந்தோம். என்ன நடக்கிறது என்று எங்களால் சில நிமிடங்கள் உணர முடியவில்லை.உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி ஓடி விட்டோம். எங்கள் வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்தன.பாத்திரங்கள் உருண்டன. மேஜைகள், நாற்காலிகள் தலைகீழாகச் சரிந்தன என்றார்.

இவரது 17 வயது மகன் ஆன்ட்ரூ, உடனடியாக வீட்டிலிருந்த ஒவ்வொருவரையும் வெளியேற்றினார். திடீரென்றுஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து ஸீ டாக் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

சாலைகளில் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சான் சால்வேடரில்இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பல உயிர்களைப் பலி வாங்கியது நினைவிருக்கலாம்.

எல் சால்வேடரில் நிலநடுக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X