For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ஜ.கவிலேயே வாஜ்பாய்க்கு எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Vajpayeeமத்தியில் 1998 ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட வாஜ்பாய் முதன்முறையாக, ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டால் எதிர்கட்சிகள்மட்டுமின்றி பாஜக உறுப்பினர்களாலேயே விமர்சிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்துத்துவ கொள்ககைளில் மிதமான போக்கு கொண்டவர் பிரதமர் வாஜ்பாய். இதனால் இந்துத்துவ கொள்கைகளில் தீவிர மனப்பான்மை கொண்டஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் வாஜ்பாய்க்கு எதிராகவே பேசி வந்தார்கள்.

இந்த இரு இயக்கங்களையும் புறக்கணித்து வந்த வாஜ்பாய்க்கு ஆயுதப் பேர ஊழலால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தலைவர்கள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரித்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் வாஜ்பாய்.

முன்னதாக, பாஜக தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் லஞ்சம்பெற்றதாக டெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் வாஜ்பாய் மேல்தொடர்ந்து புகார்களை அள்ளி வீசி, வாஜ்பாய் அரசை பதவி விலக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் கே.எஸ்.சுதர்ஸன் கூறுகையில்,

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

பிரதமர் அலுவலகத்தில் திறமையானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா போன்றவர்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரிஜேஷ் மிஸ்ரா போன்றவர்களை ஊக்குவித்தது முக்கியமான முடிவுகளில் அவர் தலையிடும் அவசியம் ஏற்பட்டு விட்டது. இதுதவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஆயுதப் பேர ஊழலால் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும்நெருக்கடியை விட பாஜக வுக்குள்ளேயே சில தலைவர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிதான் அதிகமாக உள்ளது. இதனால் அரசியல் ரீதியாக வேறு சிலமாற்றங்கள் கொண்ட முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வாஜ்பாய் தள்ளப்பட்டு விட்டார்.

அதாவது பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா, பிரதமரின் வளர்ப்பு மகன் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோர் கூறும் ஆலோசனைகளுக்குபிரதமர் முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வாஜ்பாய்க்கு ஏற்பட்டு விட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளவர்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ வாஜ்பாய் அரசை கவிழ்க்க வேண்டும் என்றோ அல்லது தேர்தல் அறிவிக்கவேண்டும் என்றோ முயற்சிக்கவில்லை. ஆனால் பாஜகவில் உள்ளவர்களால் தான் பிரதமர் வாஜ்பாய்க்கு உண்மையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனிப்பெரும்பான்மை உடைய கட்சி பாஜக. இக்கட்சிக்கு 182 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்.வாஜ்பாய்க்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் அத்வானி மட்டுமே மாற்றாக அமைவார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சிப் பொதுச் செயலாளர் நரேந்திர மோடி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்ஸன் கூறிய கருத்துக்களுக்கு நான் பதில் எதுவும் கூறவிரும்பவில்லை. சுதர்ஸன் என்ன கூறியிருக்கிறார் என்பதை நன்கு விசாரித்து விட்டுத்தான் பதில் கூற முடியும் என்றார்.

இருப்பினும், மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு கூறி வருவது இதுமுதல்முறையல்ல.

சுதேசி ஜாக்ரான் மன்ஞ்ச் தலைவர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஸன் ஆகியோர், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர்அலுவலக அதிகாரி என்.கே.சிங் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X