For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்ணில் பாய்ந்த ரஷிய என்ஜின் பொருத்தப்பட்ட அமெரிக்க ராக்கெட்

By Staff
Google Oneindia Tamil News

கேப் கேனவரல்:

ரஷிய என்ஜின் பொருத்தப்பட்ட அமெரிக்க ராக்கெட், அட்லஸ், அமெரிக்காவின் கேப்கேனவரல் விமானப்படை ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை ஏவப்பட்டது. இதில்ஐரோப்பிய தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வைக்கப்பட்டுள்ளது.

அட்லஸ்-3ஏ, ராக்கெட் முதல் முறையாக இப்போதுதான் ஏவப்பட்டுள்ளது.ராக்கெட்டின் முதல் நிலையில், ரஷியாவில் வடிவமைக்கப்பட்ட ஆர்டி-180 ரகஎன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டை செலுத்துவது நான்கு முறைஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஏவுதளத்திற்கு அருகே நின்றிந்த சுற்றுலாப்பயணிகளின் 70-க்கும் மேற்பட்ட படகுகளை அங்கிருந்து பாதுகாப்பானஇடங்களுக்கு அகற்றுவதில் ஏற்பட்ட சிரமமும் ஏவுதலைத் தாமதப்படுத்தியது.

ரஷிய என்ஜின் 2,80,500 கிலோ உந்து சக்தியைக் கொடுக்கவல்லது. அட்லஸ்ராக்கெட்டில் ஐரோப்பாவின் யூடெல்சாட் செயற்கைக் கோள் வைக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X