For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் நிரபராதி: மனோஜ் பிரபாகர் உருக்கம்

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ) 5 ஆண்டுகாலம் கிரிக்கெட்விளையாட தடைவிதிக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் ஏபேஸ் நிதி நிறுவன மோசடிக்கும், தனக்கும் எந்த விதமான சம்பந்தமும்இல்லை, நான் நிரபராதி என்று கூறியுள்ளார்.

மனோஜ் பிரபாகர் லக்னோவில் உள்ள ஏபேஸ் நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகச்செயல்படுவதாகக் கூறி வந்தது. பொதுமக்கள் பலருக்கு இந்த நிதி நிறுவனத்தில்அதிகமான அளவில் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது. முதலீட்டாளர்கள் பணமும் திரும்பதரப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்துஉத்தராஞ்சல் போலீசார் மனோஜ் பிரபாகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பொதுமக்கள் பணத்தை பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தததாக அவர் மீதுஇந்திய சட்டப்பிரிவு 420 மற்றும் 406ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அவருக்கு ஹால்ட்வானி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டும்பிறப்பித்திருந்தது.

மனோஜ் பிரபாகரை உத்தராஞ்சல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ஆனால்அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை லக்னோ வந்த பிரபாகர் செய்தியாளர்களிடம்கூறுகையில், நான் எனது உண்மை நிலையை எடுத்துக் கூறவே வந்துள்ளேன். நான்நிரபராதி. எனக்கும் ஏபேஸ் நிதி நிறுவனத்திற்கும் எந்த விதமான தொடர்பும்கிடையாது.

நான் ஏபேஸ் கம்பெனிக்காக மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவர்கள் வெளியிட்டமேக்கப் பொருள் ஒன்றுக்காகத்தான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைஉபயோகப்படுத்தி, நான் அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனராக இருப்பதாக கூறிஅவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பல ஆவணங்களில் என் கையெழுத்து இருப்பதை புகார் செய்தவர்கள்காட்டியிருக்கிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும் போதும், மற்றநிகழச்சிகளில் பங்கேற்கும் போதும் பலரும் என் கையெழுத்தை (ஆட்டோகிராப்)கேட்டு பெறுவார்கள். அதில் பலர் என் கையெழுத்தை இது போன்ற சட்டவிரோதமானசெயல்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

நானும் ஏபேஸ் கம்பெனியில் ரூ 25 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அதை நான்எவ்வாறு திரும்பப் பெறுவது என யோசித்து வருகிறேன் என்றார்.

முதலீட்டாளர் ஒருவர் கூறுகையில், மனோஜ் பிரபாகர் இந்த கம்பெனியின் நிர்வாகஇயக்குனர் என கூறப்பட்டதுதான் பலரும் இந்த கம்பெனியில் முதலீடு செய்ய முக்கியகாரணமாகும் என்றார்.

இந்நிலையில் ஹால்ட்வானி நீதிமன்றம் பிறப்பித்திருந்த ஜாமீனில் வரமுடியாத கைதுஉத்தரத்திற்கு உத்தராஞ்சல் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X