For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாடுகள் கிரிக்கெட்: பைனலில் இந்திய அணி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில், இன்று (வியாழக்கிழமை) நடந்த நியூசிலாந்துக்குஎதிரான போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றுவிட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. துவக்க ஆட்டக்காரர் சின்கிளெய்ர் 3 ரன்கள்எடுத்த நிலையிலேயே அவுட் ஆனாலும், அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் நின்று, நிதானமாக ஆடினர்.

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஆஸ்லே, பொறுமையாக ஆடி, தன்னுடைய சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர்143 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து, நேஹ்ரா பந்தில் ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து, பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து ஆடியவர்களில் குறிப்பிடும்படியாக, ப்ளெம்மிங் 66 ரன்களையும், வின்சென்ட் 45 ரன்களையும்எடுத்தனர்.

கடைசியாக, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தனர் நியூசிலாந்து அணியினர். இந்தியத்தரப்பில், நேஹ்ரா 3 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்சாய்த்தனர்.

265 என்ற கடினமான இலக்குடன், அடுத்து ஆடவந்த இந்திய அணியினர், கடினம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைமறந்தனர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடினர்.

இன்று வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்குப் போக முடியும் என்பதை உணர்ந்த துவக்க ஆட்டக்காரர்கள்கங்குலியும் ஷேவாக்கும் பெரும் பொறுப்புடன் ஆடினர்.

கங்குலி அப்போதைக்கப்போது "மட்டை" போட்டு ஆடினாலும், இந்திய அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்திவைத்து விட்டுதான் அவுட் ஆனார். அடுத்து வந்த லக்ஷ்மண் ரன் எதுவும் எடுக்காத நிலையில், பெவிலியன்திரும்பிய போதிலும், ஷேவாக் சிறிதும் அசரவில்லை.

கிடைத்த பந்துகளையெல்லாம் எல்லைக் கோட்டிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் ஷேவாக். 70 பந்துகளைச்சந்தித்த இவர், 19 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் தன்னுடைய முதலாவது சதத்தை எடுத்தார்.

சரியாக 100 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, மேக்மில்லன் பந்தில் க்ளீன் போல்டாகி,சதமடித்த சந்தோஷத்தில் பிட்சை விட்டு வெளியேறினார்.

அதற்குப் பிறகு வந்த திராவிடும் பதானியும் கூட, முன்னவர்கள் விட்டுச் சென்ற பணியைச் செவ்வனேதொடர்ந்தனர். இவர்கள் 2 பேரும் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து, இந்தியாவை வெற்றி எல்லைக்குஅழைத்துச் சென்ற பிறகுதான் ஓய்ந்தார்கள்.

திராவிட் கடைசியாக அடுத்தடுத்து அடித்த 2 பவுண்டரிகளின் மூலம் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள்என்ற அருமையான ஸ்கோரை அடைந்து வெற்றி பெற்றது. 56 பந்துகளில் 57 ரன்களை திராவிடும், 38 பந்துகளில்35 ரன்களை பதானியும் எடுத்திருந்தனர்.

சந்தேகமே இல்லாமல், ஷேவாக்கிற்கே ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

வரும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில், ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டஇலங்கை அணியுடன் மோதவிருக்கிறது இந்திய அணி.

கோகோ-கோலா கோப்பையை இந்தியா அணி வெல்லுமா? ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருப்போமே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X