For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஸ்: உலக சாம்பியன் ஆனார் 9 வயது சேலம் மாணவி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

உலக அளவிலான 9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த மாணவி சத்யப்ரியாஉலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

சேலம் வித்யா நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). இவர் சேலம் சிறுமலர் மேல் நிலைப் பள்ளியில்உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சத்யப்ரியா (வயது 9).

சத்யப்ரியாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட இவரதுதந்தை இவருக்கு ஊக்கமளித்தார்.

பள்ளியில் நடக்கும் அனைத்து செஸ் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை குவித்தார் சத்யப்ரியா. இவரின்திறமையைப் பார்த்த மாவட்ட செஸ் கிளப்பும் இவருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்தது.

மாவட்ட அளவில் நடக்கும் செஸ் போட்டிகளிலும் சத்யப்ரியாவே முதல் இடம் பெற்று வந்தார். இதையடுத்து,மாநில அளவிலும், தேசிய அளவிலும் தன் மகள் பிரபலம் பெற வேண்டும் என்றும் மேலும் பல வெற்றிகளைகுவிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் வெங்கடாசலம்.

இதற்காக எங்கெங்கு செஸ் போட்டிகள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் தன் மகளை கலந்து கொள்ளவைத்தார்.

இந்நிலையில், லண்டனில் அகில உலக செஸ் சாம்பியன் போட்டி நடக்கும் விவரம் மாநில சாம்பியன் என்றஅடிப்படையில் சத்யப்ரியாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இது அகில உலக அளவில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்பங்கு பெறும் போட்டி.

சத்யப்ரியா இதுவரை செஸ் போட்டிகளில் செய்த சாதனைகளை தொகுத்து விண்ணப்பத்துடன் லண்டனுக்குஅனுப்பி வைத்தார் வெங்கடாசலம். இதையடுத்து, போட்டியில் பங்கேற்குமாறு சத்யப்ரியாவிற்கு அழைப்பு வந்தது.

ஆனால், சொந்த செலவில்தான் போட்டியில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனால், பெரும் பாடுபட்டு தன் நண்பர்களிடம் கடன் வாங்கி ஒன்றரை லட்ச ரூயாயைத் திரட்டி மகளுடன்லண்டன் பயணமானார் வெங்கடாசலம்.

லண்டன் உலக சாம்பியன் போட்டியில் பங்கு கொள்ள பல நாட்டு வீராங்கனைகளும் வந்திருந்தனர். ஆனால்,எதற்கும் கலங்காத சத்யப்ரியா, படிப்படியாக வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த கோல்ட்பெர்க் என்பவருடன் சத்யப்ரியா மோதினார். இவர் "ராணி"சதுரங்க காயைக் கொண்டு இரண்டே முவ்மென்ட்களில் கோல்ட்பெர்க்குக்கு செக் வைத்து உலக சாம்பியன்பட்டத்தை வென்றார்.

சத்யப்ரியாவின் சாதனை குறித்து அவர் படித்துவரும் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி முதல்வர், "சத்யப்ரியாமிகவும் அறிவு கூர்மை உள்ளவர். எங்கு செஸ் போட்டி நடந்தாலும் வெற்றிகளை குவித்தவர். படிப்பிலும்சிறந்தவர். அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பள்ளி சார்பில் வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்தார் விஸ்வநாதன்ஆனந்த். இந்நிலையில் சத்யப்பரியாவும் இந்தியாவின்-தமிழ்நாட்டின் பெருமையைக் கூட்டியுள்ளார்.

இந்தியாவில் இருந்து, தற்போது நடந்த இந்த உலக செஸ் சாம்பியன் போட்டியின் 9 வயது பிரிவில் கலந்துகொள்ள சென்றது சத்யப்ரியா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X