For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பட்ஜெட் .. பொன்னையன் தாக்கல் செய்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் சனிக்கிழமை தமிழகசட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் சி.பொன்னையன்தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா தல்வராகப் பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில் பெண்கள் நலம், போலீஸ் துறைமேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.காலை 10.30 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து தி.மு.க.எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலத்தில் கருணாநிதி தலைமையில் நடந்தது.

அதே போல அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டமும் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர்ஜெயலலிதா தலைமையில் நடந்தன.

சபையை ஸ்தம்பிக்க செய்ய திமுக திட்டம்?

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், இந்தக் கூட்டத்தொடரில் வன்முறை மற்றும் அமளி துமளியை ஏற்படுத்த தி.மு.கவினர்திட்டமிட்டுள்ளனர்.

எனவே அ.தி.மு.க உறுப்பினர்கள் அவர்களது வன்முறை திட்டத்திற்கு இடம்கொடாது பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளேன்.

என்னை இழிவுபடுத்தியும், கேவலமாகவும் பேசி அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைத்தூண்ட தி.மு.கவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கெல்லாம் அஞ்சாது பொறுமை காத்துஅ.தி.மு.க உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

சட்டசபைக் கூட்டத் தொடரை நடத்த விடக் கூடாது. வன்முறையைத் தூண்டி சபையைஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று கருணாநிதியும், முரசொலி மாறனும்அவர்களது எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தகவல் உளவுத்துறைமூலம் எனக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.கவினர் அடிதடியில் கூட இறங்கவாய்ப்புள்ளது. இதுகுறித்து சபாநாயகர் காளிமுத்துவிடம் தெரிவித்து அவரைஉஷாராக இருக்கக் கூறியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.

கருணாநிதி கலந்து கொள்வது சந்தேகமே:

தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் கருணாநிதி, சட்டசபை தி.மு.கதலைவர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், ஜனநாயகமுறைப்படி, கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் எங்களது கடமையைசட்டசபையில் ஆற்றுவோம். இதை பலமுறை சொல்லியிருக்கிறோம்.

எந்தப் பிரச்சினைகளை சபையில் பேசுவோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது.முக்கியப் பிரச்சினைகள் அனைத்தையும் குறித்துப் பேசுவோம். எனது கைது,தி.மு.கவினர் தொடர் கைது, தி.முக பேரணியில் நடந்த வன்முறை குறித்து தி.மு.கநிச்சயம் சட்டசபையில் பிரச்சினை எழுப்பும். அதை பேசாமல் இருக்க முடியுமா?

நவம்பர் 14ம் தேதிக்குப் பிறகு ஜெயலலிதா முதல்வராக நீடிக்க வேண்டுமானால், அவர்எம்.எல்.ஏ. ஆக வேண்டும். அதற்கு நாமினேசன் செய்ய வேண்டும். ஆனால் அதுநிராகரிக்கப்பட்டு விடும். சுப்ரீம் கோர்ட் வேறு அவருக்கு எதிரான தீர்ப்புகளைவழங்கி வருகிறது. பாத்திமா பீவி கூட இப்போது கவர்னராக இல்லை. எனவே 14ம்தேதிக்குப் பிறகு அவர் நீடிப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.

என்னால் சட்டசபையில் 2 நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டு பேச முடியாது. எனவேசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து பரிசீலிப்பேன் என்றார் கருணாநிதி.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் சூடு பறக்கும் (அடிதடி உள்பட)விவாதங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X