For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா 100: ஒரு அலசல்

By Staff
Google Oneindia Tamil News

சன் டிவி நிருபர் கைதுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் சம்பவங்கள்விட்டலாச்சாரியா திகில் படத்தில் வருவதைப் போல எப்போது, என்ன நடக்கும் என்றஅச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மீது சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில்ஊழல் நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக கருணாநிதி கைது செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் திடீரென ஒருசனிக்கிழமையில் அதிகாலையில் கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்த போலீஸார்அதிரடியாக அவரைக் கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர், முதியவர் என்ற கணக்கையெல்லாம் கண்டுகொள்ளாமல்தூக்கி வந்தனர். கருணாநிதி கைதுச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையேஉலுக்கி விட்டது. கருணாநிதி கைதின்போது அவரைக் காப்பாற்ற வந்த மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

நான்கு நாட்கள் சிறையில் வாசம் செய்த கருணாநிதியை மனிதாபிமானஅடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

கருணாநிதி விடுதலையான பிறகும் கூட பிரச்சினை பெரிதானது. கருணாநிதி கைதுச்சம்பவம் தொடர்பாக மாநில ஆளுநர் பாத்திமா பீவியிடம் மத்திய அரசு விளக்கம்கேட்டது. ஆனால் அவர் தமிழக போலீஸார் கொடுத்த அறிக்கையையே விளக்கமாகஅனுப்பியதால் அவரை டிஸ்மிஸ் செய்தது.

கருணாநதி கைதின்போது அவரைக் காப்பாற்ற வந்த மத்திய அமைச்சர்கள் முரசொலிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரைக் கைது செய்ததற்கான விளக்கத்தையும் மத்திய அரசுகேட்டது. இதுதொடர்பான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தமிழக அரசு கண்டிப்பாக கூறி விட்டது.

இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள்கட்சி கூட்டணியிலிருந்து திடீரென விலகியது. ஜெயலலிதா மீது கடுமையானபுகார்களைக் கூறினார் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்.

இந்த நிலையில், கருணாநிதியைக் கைது செய்தபோது, காவல்துறை அதிகாரிகள்நடவடிக்கை குறித்து நீதிபதி ராமன் தலைமையிலான கமிஷன் ஆராயும் என தமிழகதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இந்தக் கமிஷனை புறக்கணிப்போம் எனதிமுக தலைவர் கருணாநிதி கூறி விட்டார்.

பரபரப்பு கொஞ்சம் அடங்கிக் கொண்டிருந்த வேளையில், மு.க.ஸ்டாலினின்நெருங்கிய நண்பரான சென்னை அண்ணாநகர் தொழிலதிபர் ரமேஷ் குடும்பத்துடன்தற்கொலை செய்து கொண்டார். ஸ்டாலினுக்கு எதிராக வாக்குமூலம் தரக் கோரிபோலீஸார் செய்த சித்ரவதை தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாககூறப்பட்டது. தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது.

இந்தச் சூழ்நிலையில், கருணாநிதி கைது சம்பவத்தின்போது சர்ச்சைக்குள்ளானகாவல்துறை அதிகாரிகளான முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியஅதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது.

ஆனால் அவர்களை அனுப்ப முடியாது எனக் கூறி தமிழக அரசு விளக்கம்அனுப்பியது. முன்னாள் டிஜிபி ராஜகோபாலனையும் அனுப்புமாறு மத்திய அரசுஉத்தரவிட்டது. ஆனால் அதையும் முடியாது என தமிழக அரசு மறுத்து விட்டது.

இரு அரசுகளுக்கும் இடையே கடுமையான கடிதப் போர் நடந்து கொண்டிருந்தது.இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகசார்பில் 100 இடங்களில் பேரணிகள் நடந்தன.

உச்சகட்டமாக சென்னையில் மாபெரும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வரலாறு காணாத அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் தொடங்கி அமைதியாக நடந்தது.

பேரணி முடியப் போகும் இடத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீஸார்கடுமையாக நடந்து கொண்டு தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடுஎன விளையாடி விட்டார்கள்.

இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைக்கு 6 பேர் பலியானார்கள். பேரணியில் கலந்துகொண்டு விட்டு நடந்த வன்முறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சைதாப்பேட்டைஎம்.எல்.ஏ. வை.பெருமாள் மாரடைப்பால் இறந்தார். பேரணி வன்முறை குறித்துவிசாரிக்க நீதிபதி பக்தவச்சலம் கமிஷனை ஜெயலலிதா அறிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜகோபாலனை டெல்லிக்கு அனுப்பமுதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் கொடுத்தார். அடுத்த நாளே ராஜகோபாலன் டெல்லிசென்று தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

100 நாட்களை நிறைவு செய்வதற்கு முன்பு கூட திமுகவிடம் அதிமுக கொஞ்சம்கடுமையாகவே நடந்து கொண்டுள்ளது. சட்டசபையில் நடந்த விவாதத்தின்போதுதிமுக உறுப்பினர் பரிதி கூறிய சில வார்த்தைகளுக்காக அவரை 2 நாட்கள்சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் காளிமுத்து.

முதல்வராக ஜெயலலிதா நடித்து அடிதடிக் காட்சிகளுடன் கூடிய தமிழக ஆட்சி என்றஇந்தப் படம் 100 நாட்களைத் தொட்டுள்ளது. இந்த 100 நாட்களும் தமிழகத்திற்கும்,தமிழக வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பலன் எதையும் கொடுக்கவில்லை. பழிவாங்கும் போக்கை மட்டுமே பிரதானமாக கொண்ட நடவடிக்கைகளாகவே அனைத்துசெயல்களும் தெரிகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால் மக்கள் மத்தியில் அதிருப்திபெருகும், மாநில வளர்ச்சி ஸ்தம்பித்துப் போகும்.

இத்தனை களேபரங்கள் நடந்திருந்தாலும் கூட ஆங்காங்கே சில திட்டங்கள்,நடவடிக்கைகள் ஜெயலலிதா அரசுக்கு கொஞ்சம் பெயர் தேடித் தந்திருக்கின்றன.அவற்றுல் சில ..

1.ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு மாற்றல் பெற தமிழக அரசு கொண்டு வந்த கவுன்சிலிங் திட்டம். இதில் சில இடங்களில் தவறுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டாலும் கூட பல ஆசிரியர்கள் பலன் அடைந்துள்ளனர். கணவனைப் பிரிந்து வேறு ஊர்களில் பணியாற்றி வந்த ஆசிரியைகள், மனைவியைப் பிரிந்து வேறு ஊர்களில் பணியாற்றிய கணவர்களுக்கு இது பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது.

2.சென்னை நகரின் தாகம் தீர்க்க ஈரோடு, நெய்வேலி ஆகிய ஊர்களிலிருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகித்தது தமிழக அரசு. தலைவிரித்தாடிய தண்ணீர்ப் பஞ்சப் பேயை கொஞ்ச காலத்திற்கு ஓட்டுவதற்கு இது பெரிதும் உதவியது.

3.பொறியியல், மருத்துவம் ஆகிய தொழில் படிப்புகளுக்கு அனுமதி கிடைத்து வறுமை அல்லது ஏழ்மை காரணமாக அதில் சேர முடியாமல் தவித்த எண்ணற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு அவர்களது முழுப் படிப்புக்கும் தேவையான நிதியுதவியைச் செய்தது.

4.படித்தும் வேலையில்லாத வறுமையில் வாடிய பலருக்கு வேலை போட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா.

இதைத் தவிர ஜெயலலிதா ஆட்சியில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இதுவரைஎதுவும் நடைபெறவில்லை. அடுத்துத் தான் செய்யப் போகும் திட்டங்கள் குறித்துபட்ஜெட்டில் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயலலிதா.

ஒரு ஆட்சியை 100 நாட்கள் வரை விமர்சனம் செய்வது சரியாகாது என்றஅடிப்படையில் இதுவரை எந்த எதிர்க்கட்சியும் ஜெயலலிதா அரசை பெரிதாகவிமர்சனம் செய்ததில்லை. ஆனால் இனிமேல் அதிகளவில் விமர்சனங்களைஜெயலலிதா சந்திக்க வேண்டி வரும்.

எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதை விட்டு விட்டு மாநில வளர்ச்சிக்குத் தேவையானநடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்குவாரா என்ற கேள்விதான் அவர் முழுமைசெய்துள்ள இந்த 100-வது நாளின்போது மக்களின் மனதில் மேலோங்கி நிற்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X