லண்டன் ஓட்டல் வழக்கில் ஜெ.க்கு சம்மன்
சென்னை:
லண்டன் ஓட்டல் வழக்கில் அக்டோபர் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை செசன்ஸ்நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்குச் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ரூ.43.98 கோடி விலை கொடுத்து 2ஓட்டல்களை தினகரனுக்குச் சொந்தமான 2 நிறுவனங்கள் வாங்கியுள்ளன. பிறகு கடந்த 1998ம் ஆண்டு இந்த 2ஓட்டல்களும் ரூ.121 கோடி விலையில் விற்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அசோக்குமார், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அந்த வழக்கில் 2-வதுகுற்றவாளியாகக் கருதப்படும் தினகரனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் அக்டோபர் 4ம் தேதி 2 பேரும்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி அசோக்குமார், "அந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியிடம், கடந்த ஜூன் 12ம்தேதி சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அந்த 2 பேருக்கும் நீங்கள் சம்மன் அனுப்பவில்லை" என்றுகேட்டார்.
அதற்கு, வழக்கு பற்றிய விசாரணை அப்போது தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு சம்மன்அனுப்பவில்லை என்று விசாரணை அதிகாரி கூறினார். மேலும் வழக்கில் முதல்குற்றவாளியான ஜெயலலிதா மீதுசாட்டப்பட்ட குற்றத்திற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, "விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் சம்மன் அனுப்பத் தேவையில்லை, என்றுநீங்கள் ஏன் அப்போது கூறவில்லை?" என்று விசாரணை அதிகாரியிடம் நீதிபதி கேட்டார். மேலும் விசாரணைநடந்துகொண்டிருக்கும் போது சம்மன் அனுப்பக் கூடாது என்று நிபந்தனைகள் எதுவும் இருக்கிறதா என்றுசட்டப்பிரிவிடம் அவர் கேட்டார்.
பிறகு, ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பவில்லையா என்றும் நீதிபதிவிசாரணை அதிகாரியிடம் கேட்டார். மேலும் விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பத் தயாராக இருக்கிறாரா என்றுஎழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பிரிவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நடந்த வாதத்தின் போது நீதிபதியிடம் விசாரணை அதிகாரி கூறியதாவது,
இந்த வழக்கில் முன்னாள் விசாரணை அதிகாரி அருணாச்சலம் மற்றும் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குநர்சுப்ரமணியம் உட்பட 4 பேர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் விசாரிக்கப்பபட்டுள்ளனர் என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications