For Daily Alerts
ஊட்டியில் கரும்புகை கிளப்பிய 86 வாகனங்களுக்கு தடை
ஊட்டி:
ஊட்டியில் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடும் விளைவிக்கும் வகையில் அதிகமான அளவில் கரும்புகை கிளம்பவண்டியோட்டிச் சென்ற 86 பேருடைய வாகனங்கள் தகுதியிழந்ததாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, இரு தரப்பினரும் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மொத்தம் 500 இரு சக்கர, மூன்றுசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது 86 வண்டிகள் அதிக அளவில் புகைகளை வெளியிட்டு சுற்றுச்சூழலை கெடுத்ததாகக் கண்டறியப்பட்டன.இதையடுத்து, அந்த 86 வாகனங்களும் ஓட்டுவதற்குரிய தகுதியை இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஆரோக்கியசாமி இத்தகவலைத் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!