ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்களில் தனது தல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்றுகூறப்படுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற காரணத்தால்ஜெயலலிதாவால் போட்டியிட முடியவில்லை. இருப்பினும் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

எம்.எல்.ஏ. ஆகக் கூட தகுதியில்லாத ஜெயலலிதாவை ஆளுநர் முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுசரியல்ல என்று கருத்துக் கிளம்பியது.

இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுசெல்லாது என்று அறிவிக்கக் கோரி சுப்ரிம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு வெளியாக வேண்டியுள்ளது. அதேபோல, ஜெயலலிதாவுக்குடான்சி வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்துள்ளார். அதன்விசாரணை அக்டோபர் மாதத்தில்தான் துவங்கும்.

தற்போதைய சூழலில் நவம்பர் 13ம் தேதிக்குள் ஜெயலலிதா தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆக வேண்டும். ஆனால்அது நடக்க இயலாத காரியமாக தோன்றுகிறது.

டான்சி அப்பீல் வழக்கில் விசாரணை அடுத்த மாதம்தான் துவங்கவுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த வழக்குவிசாரணை முடிந்து விடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அப்படியே முடிந்தாலும் கூட உடனடியாக தேர்தலுக்குஏற்பாடு செய்ய முடியாது.

அடுத்த வழக்கு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கு. இந்தவழக்கின் விசாரணை முடிந்து விட்டது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகி விடும்.

இந்தத் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையாது என்று ஜெயலலிதா பலமாக நம்புகிறார். அப்படி தீர்ப்பு பாதகமாகவந்தால் உடனடியாக ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்தாக வேண்டும்.

இப்போதைய நிலையில் டான்சி வழக்கில் மட்டுமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு அல்லது உத்தரவு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

டான்சி வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியான பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. தங்கவேல், தான் டான்சி வழக்கில் கூறியசாட்சியம், உண்மைக்கும், மனசாட்சிக்கும் மாறானது என்று கூறியுள்ளார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றை லஞ்சஒழிப்பு போலீஸார் 3-வது தனிக் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விஷயத்தை அப்பீல் விசாரணையின்போது பெரிதுபடுத்த ஜெயலலிதா தரப்பு திட்டமிட்டுள்ளது.ஜெயலலிதா தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு, தங்கவேலுவின் சாட்சியத்தை மீண்டும் பெற முடிவுசெய்தால், கிட்டத்தட்ட மறு விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு சமமமாகும்.

அப்படி நடந்தால் டான்சி வழக்கும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். மீண்டும் விசாரணைக்குஉத்தரவிடப்பட்டால், ஜெயலலிதா தேர்தலில் நிற்பதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதை எதிர்பார்த்தே ஆண்டிப்பட்டி தொகுதியை காலியாக வைத்திருக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.அதன்காரணமாகவே தங்க தமிழ்ச் செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் தேர்தல் மார்ச் மாதத்தில்தான் நடைபெற முடியும். அப்போதுதான் ஜெயலலிதாவும் போட்டியிட முடியும்.ஆனால் நவம்பர் மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால், தான் பதவி விலகி விட்டு மார்ச்மாதம் வரை வேறு ஒருவரை முதல்வராக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா யாரை நியமிப்பார் என்பது அதிமுக வட்டாரம் உள்பட யாருக்குமே தெளிவாகதெரியவில்லை. ஜெ. மனதில் யார் இருக்கிறார் என்பது பெரும் மர்மமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு பெயர்அடிபடுகிறது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி ஜெயலலிதாவின் உறவினர் ஒருவர் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார்என்று கூறப்படுகிறது. ரத்த சம்பந்தள்ள அந்த உறவினரின் பெண், முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார்என்றும் கூறப்படுகிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் தற்போதுள்ள அமைச்சர்களிலிருந்து யாரும்முதல்வர் பதவியில் அமர்த்தப்பட வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரமே உறுதியாக நிம்புகிறது. நிச்சயம்வெளியிலிருந்துதான் யாராவது ஒருவர் முதல்வராகப் போகிறார் என்று அதிமுகவினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

இன்னும் சில நாட்களில் ஜெயலலிதா ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அதுதொடர்பான தீவிரவிவாதத்தில் அவர் இருக்கிறார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்குபெருமளவில் உதவி வருகிறார் என்று கூறப்படுகிறது. சோவும் பல ஐடியாக்களைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் தமிழக அரசியலில் மாபெரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது தவிர்க்க முடியாததுஎன்றே கூறலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற