சென்னையில் நவீன விபசாரம் - 2 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வார, இரு வார, மாத முறைப்படி பெண்களை வைத்து விபசாரம் செய்த ஒரு கிளப் முதலாளியும், 20 வயதுப்பெண்ணும் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ளது "எலைட் கிளப்". "சுகம் கிடைக்க வேண்டுமா? எங்களை நாடுங்கள்" என்று செய்தித்தாள்களில் அடிக்கடி இந்த கிளப் விளம்பரமும் செய்து வந்துள்ளது.

இந்த கிளப் விபசாரத்தில்தான் ஈடுபட்டுள்ளது என்று திங்கள்கிழமை போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து,ஒரு போலீஸ் கஸ்டமர் போல் நடித்து, எலைட் கிளப்பிற்குச் சென்றார்.

கிளப்பின் முதலாளி ஜோசப் செபாஸ்டின் (52) உடனே சந்தோஷமாக இவரை அழைத்துக் கொண்டு, தி. நகரில்உள்ள ஒரு இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு பெண்ணிடம், இந்த "கஸ்டமரை" அறிமுகப் படுத்தி வைத்தார் செபாஸ்டின். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த போலீஸ், செபாஸ்டினையும், அந்தப் பெண்ணையும் கைது செய்தார்.

விபசாரத்திற்காக, பல ஸ்கீம்களையும் செபாஸ்டின் அறிமுகப்படுத்தி இருந்தாராம். வார இறுதிக்காக புக்செய்பவர்களுக்கு, வார இறுதியின் 2 நாட்களுக்கும் ஒரு பெண்ணைக் கொடுத்து விடுவார்களாம்.

"போர்ட்நைட் ஸ்கீம்" என்று ஒன்று இருக்கிறது. இந்த ஸ்கீமில் புக் செய்பவர்கள், எலைட் கிளப் தரும் ஒருபெண்ணை 15 நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாமாம்.

"மன்த்லி ஸ்கீம்"-ல் புக் ஆபவர்களுக்குத் தரப்படும் பெண்களை அவர்கள் ஒரு மாதத்திற்கு வைத்துக் கொள்ளலாம்.வெளியூர்களுக்கு அவர்களை டூர் கூட்டிக் கொண்டு போகவும் இவர்களுக்கு அனுமதி உண்டாம்.

இந்தக் கிளப்பில் உறுப்பினராகச் சேர ரூ.3,000 நிர்ணயித்திருந்தாராம் செபாஸ்டின்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற