வாணியம்பாடியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாணியம்பாடி அருகே காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற 2 பெண்களை காட்டு யானை துதிக்கையால் தூக்கிவீசியதால் பலியானார்கள்.

வாணியம்பாடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ங்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி செல்வம். அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணி என்பவரது மனைவி ஜெல்லம்மாள்.

இவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை உமராபாத் அருகே உள்ள மேல்கூர்பாளையம் மலைக்கு விறகு பொறுக்கச்சென்றுள்ளனர். இவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் ஆறுமுகம் என்பவர் நடந்து சென்றுள்ளளார்.

காட்டுக்குள் இந்த 3 பேரும் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒர காட்டு யானை வந்து செல்வத்தையும்,ஜெல்லம்மாளையும் துதிக்கையால் தூக்கி மரங்களின் மேல் வீசியுள்ளது.

இதில் அந்த 2 பெண்களும் இறந்து போனார்கள். இதைக்கண்டு மிரண்டுபோன ஆறுமுகம் ஓட்டம்பிடித்து வீடுவந்துசேர்ந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற