இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக டால்மியா தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்போதையதலைவரான ஏ.சி. முத்தையாவை தோற்கடித்தார்.

இந்தப் பதவிக்கு டால்மியாவும் முத்தையாவும் கடுமையாகப் போட்டியிட்டனர். மொத்தம் 30 பேர் கொண்ட வாரியஉறுப்பினர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்நதெடுக்க வேண்டிய நிலையில் இரு தரப்பினரும் ஆதரவைத் திரட்டுவதில்தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இன்று சென்னையில் நடந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 72வது ஆண்டுக் கூட்டத்தில் தேர்தல் நடந்தது. இதில்டால்மியாவுக்கு 17 வாக்குகளும் முத்தையாவுக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.

ஜக்மோகன் டால்மியா சர்வேதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற