பாகிஸ்தானுக்கு நிதி உதவி, ஹெலிகாப்டர்கள் வழங்கும் அமெரிக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லையைக் கண்காணிக்க பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்காதிட்டமிட்டுள்ளது.

இதற்காக 75 மில்லியன் டாலர் மதிப்புள்ள கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள், கண்காணிப்புக் கருவிகளைபாகஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது. இது தவிர உடனடி நிதி உதவியாக 50 மில்லியன் டாலரையும்பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் மீதான தடைகள் நீக்கப்பட்டுவிட்டதால் இந்த உதவுகள் சாத்தியமாகியுள்ளன என அந் நாட்டுக்கானபாகிஸ்தான் தூதர் வெண்டி சேம்பர்லின் கூறினார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே தோர்ஹம், சமன் ஆகிய இடங்களில் தான் எல்லைக் கதவுகள் உள்ளன.இதன் வழியே தான் அதிகாரப்பூர்வமாக இரு நாட்டினரும் பரஸ்பரம் அடுத்த நாட்டுக்குள் நுழைய முடியும். இதுதவிர ஒற்றையடிப் பாதை இணைப்புகளும் உள்ளன. இவற்றில் குதிரைகள், கழுதைகள் மூலம் இரு நாடுகள்இடையே பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இவை தவிர ஆயிரக்கணக்கான கி.மீ. நீளம் கொண்ட எல்லை முழுக்க மலைகளும், குகைகளும் நிறைந்துள்ளதால்ஆயிரக்கணக்கானவர்கள் இரு தரப்பிலும் சட்டவிரோதமாக சென்றுவருவது மிக சுலபமாக இருந்தது.

இதுவரை இதைப்பற்றி பாகிஸ்தான் கவலைப்பட்டதே இல்லை. தனது நாட்டின் தீவிரவாதிகளைஆப்கானிஸ்தானுக்குள் சென்று வர பாகிஸ்தான் அனுமதித்தது. அதே போல ஆப்கானிஸ்தானில் இருந்துகடத்தல்காரர்களையும் பாகிஸ்தான் ராணுவம் கண்டுகொண்டது இல்லை.

இரண்டும் ஒரே நாடு போலத்தான் செயல்பட்டு வந்தன. தலிபான்களுக்கு ராணுவ பயிற்சி தந்ததே பாகிஸ்தான்ராணுவத்தினர் தான்.

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நெருக்குதல் காரணமாக அமெரிக்காவுக்கு உதவுவதாக பாகிஸ்தான்அறிவித்துவிட்டது. இதனால் தலிபான் தீவிரவாதிகளின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில்பாகிஸ்தான் உள்ளது.

இதைத் தொடர்ந்து இப்போது தான் தனது எல்லையைப் பாதுகாக்கும் வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.இதற்காக அமெரிக்க உதவியையும் கோரியுள்ளது.

50 மில்லியன் டாலர் உதவி:

பாகிஸ்தானை பல விதத்திலும் ஐஸ் வைத்து வரும் அமெரிக்கா முதல் கட்டமாக 50 பில்லியன் டாலர் நிதி உதவியைவழங்கியுள்ளது.

கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள பாகிஸ்தான் இப்போது தனது நாட்டு ராணுவத்தை தயார் நிலையில்வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. எல்லையைப் பாதுகாக்கவும் உள்நாட்டு பொருளாதார தேவைகளைசமாளிக்கவும் கூடுதலாக நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு உடனடி உதவியாக 50 மில்லியன் டாலர் வழங்க அமெரிக்க அதிபர் புஷ்உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது. அமெரிக்காவின்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உதவியை அளிப்பதாக அதிபர் புஷ் கூறியுள்ளார். பலஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள பெரிய உதவி இது தான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற