தலிபான்களிடம் பிடிபட்ட 3 அமெரிக்க ராணுவத்தினர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தோஹா (ஆப்கானிஸ்தான்):

ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 3 அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் தலிபான்களிடம்பிடிபட்டனர்.

ஆப்கானிஸ்தானுக்குள் உளவு பார்ப்பதற்காக இந்தப் படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர்.இவர்களுக்கு உதவி செய்த 2 ஆப்கானியர்களையும் தலிபான்கள் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்பு குறித்த ஆவணங்களை தலிபான்கள்பறித்தனர்.

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இந்த 5 பேரும் தலிபான்களிடம் சிக்கினர்.

ஏற்கனவே கடந்த வாரம் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 5 பிரிட்டிஷ் ராணுவ சிறப்புப்படையினர் தலிபான்களிடம் பிடிபட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் துப்பாக்கித்தாக்குதல் நடத்திவிட்டு தலிபான்களிடம் இருந்து தப்பிவிட்டனர்.

ஆனால், இப்போது அமெரிக்கப் படையினரை தலிபான்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.

இத் தகவைல கத்தார் நாட்டின் அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த டிவி மட்டும் தான் இப்போதும்ஆப்கானிஸ்தானுக்குள் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து படம் பிடித்துஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற