சென்னை விமான நிலையத்தை கலக்கிய விமானக் கடத்தல், வெடிகுண்டு புரளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தைக் கடத்தப் போவதாகவும் வந்த தொடர்வதந்திகளையடுத்து விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசியில் பேசிய ஒருவர் விமான நிலையத்தில்வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நிமிடங்களில் அவை வெடிக்கும் எனவும் கூறி விட்டு போனை வைத்துவிட்டார்.

இதையடுத்து விமான நிலையம் முழுவதும் பெரும் அச்சம் பரவியது. போலீசார் விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர்.விமான நிலையம் தவிர, விமானங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருந்தாலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விமானம் ஒன்று கடத்தப்பட இருப்பதாக பெண் ஒருவர் போனில்தெரிவித்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அனைத்து விமான பயணிகளும்சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

விமானங்களிலும் சோதனை நடந்தது. இறுதியில் இதுவும் வதந்தியே எனத் தெரிய வந்தது.

இந்த இரு தகவல்களாலும் விமான நிலையம் பதட்டத்தில் மூழ்கியுள்ளது. தற்போது விமான நிலையத்திற்குள் நுழையும்அனைவரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற