உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரமாட்டார்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்குஆதரவாக பிரச்சாரம் செய்ய மத்திய பா.ஜ.க. தலைவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று பா.ஜ.க.தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. கடந்தசட்டசபை தேர்தலின்போது இருந்த திமுக-பா.ஜ.க.கூட்டணி, இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்குஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் வாஜ்பாய், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையாநாயுடு ஆகியோர் வந்திருந்தனர்.

ஆனால் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிவேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. தலைவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று பா.ஜ.க.தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த தகவலை இன்று (புதன்கிழமை) காலை சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற