குமரிக் கடலோரம் ஒரு ஆபூர்வ காட்சி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் காந்தி மண்டபத்தில், காந்தி அஸ்தி இருந்தஇடத்தில் மேற்கூரை வழியாக சூரிய ஒளி விழுந்தது.

காந்தி மண்டபத்தில் காந்திஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த அறை உள்ளது. இந்த அறையின் மேற் கூரை வழியாக சூரிய ஒளிஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தி தினத்தன்று அறைக்குள் விழும். பிற நாட்களில் இதுபோல சூரிய ஒளி விழாது.

இந்த அபூர்வ காட்சியைப் பார்க்க செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரியில் மக்கள் குவிந்தனர்.

இதற்கிடையே காந்தியடிகளின் பிறந்த நாள் தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள கடற்கரைகாந்தி சிலைக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற