பன்னீர் - ஆளுநர் திடீர் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) காலை தமிழக ஆளுநர் சி.ரங்கராஜனை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நீடித்தது. ஆளுநரை சந்தித்த பின் வெளியே வந்த முதல்வர், அங்குகாத்திருந்த செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டு சென்று விட்டார்.

கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநர் ரங்கராஜனுடன்முதல்வர் விவாதித்திருக்கூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் 21ம் தேதி ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவி ரத்தானதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பெரியகுளம்எம்.எல்.ஏவான ஓ. பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த வாரம் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவுகள் குறித்து ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்பே செய்தியாளர்களிடம்கூற முடியும் என்றும் முதல்வர் கூறியிருந்ததார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை ஆளுநரை முதல்வர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற