தவறான தகவலால் ஏற்பட்ட புரளி- அமைச்சர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் வந்த தவறான எச்சரிக்கைக் காரணமாகத் தான் விமானம்கட்டத்தப்பட்டதாக புரளி கிளம்பியதாக விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் கூறினார்.

விமானம் கடத்தப்பட்டதாக செய்தி வந்தவுடன் நள்ளிரவில் அத்வானியுடன் ஆலோசனை நடத்திவிட்டு விமானநிலையத்திலேயே இருந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ஹூசைன் அதிகாலை 4.30 மணிக்கு நிருபர்களைசந்தித்தார்.

அவர் கூறுகையில், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த தவறான தகவலும் அவர்கள் விமானிகளுக்குக் கொடுத்த தவறானதகவலும் தான் குழ்பபத்துக்குக் காரணம். விமானம் கடத்தப்படவில்லை. இது ஒரு போலியான கடத்தல் சமாளிப்புப் பயிற்சியும்இல்லை (மாக் எக்ஸர்ஸைஸ்).

வெறும் குழப்பமான செய்தியால் ஏற்பட்ட பிரச்சனை தான் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற