கடன் தொல்லை: கணவன், மனைவி, மகள் சய-னை-டு -கு-டித்து சா-வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கடன் தொல்லை காரணமாக மனைவி குழந்தைகளுக்கு சயனைடு கலந்தகுளிர்பானத்தை கொடுத்து அதை தானும் குடித்து இறந்து போனார் நகைத்தொழிலாளி. இந்த துயரச் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.

கோயம்புத்தூரில் செங்குந்திபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். இவர்நகை தொழிலாளி (பொற்கொல்லர்). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும்ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில காலமாக தொழில் சரிவர நடக்காத காரணத்தால் ராஜேந்திரன் கடன்வாங்கும் கட்டாயத்துக்கு ஆளானார். நாளாக ஆக கடன் தொல்லை அதிகமானது.

கடன் சுமையை தாள முடியாத ராஜேந்திரன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவுசெய்தார்.

நேற்று கடையிலிருந்து குளிர் பானங்களை வாங்கி வந்தார். அந்த குளிர்பானத்தில்தான் முன்னமே வாங்கி தயாராக வைத்திருந்த சயனைடு விஷத்தை கலந்தார்.

இதை முதலில் தனது இரண்டாவது மகளான சரண்யாவிடமும், தனது மகன்மணிகண்டனிடமும் கொடுத்தார். அவர்கள் இருவரும் குளிர் பானத்தை பருகியவுடன்அதன் சுவை வித்தியாசமாக இருந்த காரணத்தால் அதை உடனே துப்பி விட்டனர்.

ஆனால் ராஜேந்திரனின் மூத்த மகள் மஞ்சுளாவும், மனைவியும் குளிர்பானத்தைகுடித்து துடிதுடித்து இறந்தனர். குளிர்பானத்தை குடித்த ராஜேந்திரனும் இறந்துபோனார்.

சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்து விட்டு துப்பிவிட்டதால் உயிர் பிழைத்துவிட்ட சரண்யாவும், மணிகண்டனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை மாநில அமைச்சர்கள்வேலுச்சாமி மற்றும் சண்முகம் ஆகியோர் சென்று பார்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற