தீயணைப்புத்துறை ஊழல்: சாட்சியளிக்க வராதவருக்கு பிடிவாரண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீயணைப்புத்துறையில் உதிரி பாகங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் சம்பந்தமான வழக்கில் அரசு சாட்சி ஒருவருக்குநீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தீயணைப்புத்துறையில் உதிரி பாகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் தீயணைப்புத்துறைஅதிகாரிகள் ஹரிஹரனே, வீரராகவன் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் அஹமதாபாத்தைச் சேர்ந்த வாடியா என்பவர். நேற்று (புதன்கிழமை)இவர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும் என்று வழக்கை விசாரித்து வரும் முதலாவது தனி நீதிமன்றநீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தன்னாள் கோர்ட்டுக்கவரமுடியாது என்று கூறி வாடியா சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதற்கான மருத்துவச்சான்றிதழும் அந்த மனுவுடன் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மனுதாரர் கோர்ட்டில் ஆஜராகமுடியாததற்கு போதுமான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று கூறி அந்தமனுவைத் தள்ளுபடி செய்ததுடன், வாடியாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற