லண்டன் ஓட்டல் வழக்கு: நவ.5ம் தேதி ஜெ. ஆஜராக உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டனில் ஓட்டல்கள் வாங்கிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தினகரன் எம்.பியும் வரும் நவம்பர்5ம் தேதி தவறாமல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அசோக்குமார்உத்தரவிட்டுள்ளார்.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கியதன் மூலம் ரூ.45 கோடி வரைசொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா மற்றும் தினகரன் எம்.பி. ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் விசாரணைநடந்தது வருகிறது.

மேலும் இந்த வழக்கில் 3-வது முறையாக நேற்று (வியாழக்கிழமை) கோர்ட்டில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பவிசாரணை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தும், சம்மனை அவர்கள் அனுப்பவில்லை. எனவேஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வரும் நவம்பர் 5ம் தேதி அவர்கள் தவறாமல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிஅசோக்குமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

லண்டனில் ஓட்டல்கள் வாங்கியது தொடர்பாக ரூ.43.98 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும தினகரன் ஆகியோர் மீது கடந்த 23.03.2001 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இந்தக் குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

பிறகு இந்த வழக்கில் இருவரும் 12.06.2001 அன்று கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பஉத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணை அதிகாரி சம்மனைக் கொடுக்காமல் 12ம் தேதியன்று இந்த வழக்குபற்றிவிசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதை ஏற்று 3 மாதம் கால அவகாசம் அளித்து12.09.2001ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினம் 2 பேரும் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப 2-வது முறையாக உத்தரவிடப்பட்டது.

பிறகு 12.09.2001 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேலும் கால அவகாசம் வேண்டும் என்று விசாரணைஅதிகாரி கேட்டார். எனவே அதை ஏற்று அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் 3-வது முறையாக இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இதுநாள் வரை ஒரு சிறிய பிட் பேப்பர் கூட விசாரணை தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் 3 முறையும் சம்மனை அனுப்ப விசாரணை அதிகாரி மறுத்துவருகிறார். ஏன் அனுப்பவில்லை என்பதற்குவலுவில்லாத காரணங்களைக் கோர்ட்டில் கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வராகவும், மற்றொருவர் எம்.பியாகவும் இருப்பதால்விசாரணை அதிகாரியால் அவர்கடிளிடம் சம்மனைக் கொடுக்கமுடியவில்லை என்று தெரிகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர் தேர்தலில் மும்முரமாக உள்ளார் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அவருக்கு சம்மனைவழங்க இஷ்டமில்லை என்று தெரிகிறது.

கடந்த முறை செப்டம்பர் 12ம் தேதியன்று 2 பேருக்கும சம்மனை வழங்குவேன் என்று எழுத்து மூலம் விசாரணைஅதிகாரி உத்திரவாதம் அளித்திருந்தும், அவரால் அதை நிறைவேற்றமுடியவில்லை.

எனவே அந்த 2 பேருக்கும் சம்மன் வழங்க கோர்ட் அதிகாரி காளமேகம் நேரில் செல்லவேண்டும். அவருக்குதகுந்த போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும்.

மேலும் இந்த வழக்கை நவம்பர் 5ம் திேக்கு ஒத்திவைக்கிறேன்.

அன்று ஜெயலலிதாவும், தினகரனும் தவறாமல் கோர்ட்டில் ஆஜராகவேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற