உள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெறஇன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர்பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும்,அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் 10 கட்சிகள்கொண்ட கூட்டணியும் போட்டியிடுகின்றன.

இது தவிர விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தனியாக போட்டியிடுகின்றன.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது.இந்த மாதம் 1ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கடந்த புதன் கிழமைவேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெறவெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்கள்வேட்புமனுவை வாபஸ் பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துதரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும், இறுதிவேட்ாபாளர் பட்டியலையும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம்வெளியிடும். அதன் பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்ஒதுக்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற