For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பறக்கிறது இன்சாட்-3சி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட்-3சி நாளை (வியாழக்கிழமை) விண்ணில்செலுத்தப்படவுள்ளது.

ஏரியன்-4 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ராக்கெட் தளத்திலிருந்து நாளை காலை 4.23மணிக்கு (இந்திய நேரப்படி) இன்சாட்-3சி விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று மாலை 4.23மணிக்கு ஆரம்பிக்கிறது.

செயற்கைக் கோளை ஏவுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டதாக பெங்களூரில் உள்ள இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

சுமார் 2,750 கிலோ எடையுள்ள இன்சாட்-3சி கடந்த டிசம்பர் 4ம் தேதியே கொருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

பெங்களூரிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள ஹாசன் மாஸ்டர் கன்ட்ரோல் மையம், இன்சாட்-3சி செயற்கைக்கோளை தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

ஏற்கனவே விண்ணில் சுற்றிவரும் இன்சாட்-2சியின் ஆயுள் விரைவில் முடியவிருப்பதால், தற்போது இன்சாட்-3சிஏவப்படவுள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு இன்சாட்-3சி உதவும்.

இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான "ஆப்பிள்" (1981) முதல் தற்போதைய "இன்சாட்-3சி" வரை மொத்தம் 8செயற்கைக் கோள்கள் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது அனுப்பப்படவுள்ள இன்சாட்-3சி செயற்கைக் கோள் முழுக்க முழுக்க இஸ்ரோவிலேயேதயாரிக்கப்பட்டது.

சுமார் ரூ.250 கோடியில் இன்சாட்-3சி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயற்கைக் கோளை ஏவுவதற்குமட்டும் ரூ.350 கோடி செலவாகும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

அடுத்த 12 ஆண்டுகளுக்கு இன்சாட்-3சி செயல்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பு:

இன்சாட்-3சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படுவதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புசெய்கிறது.

இந்த நேரடி ஒளிபரப்பு நாளை காலை 3.45 மணிக்கே துவங்குகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X