For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களை கட்டுகிறது இடைத் தேர்தல் களம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தொண்டர் பலம், பிரச்சார பலத்தை நம்பி திமுக களமிறங்க, எல்லாவிதமான பலத்தையும் நம்பி களத்தில் இறங்குகிறது அதிமுக.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சைதை தொகுதியில் 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதிமுக வேட்பாளர் ராதாரவியும் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். திமுக தொண்டர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் சைதாப்பேட்டை தொகுதிதான் அனைவரது கவனத்தையும்ஈர்த்துள்ளது.

காரணம், இது தொடர்ந்து திமுகவின் கோட்டையாக இருந்து வருவது தான். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் நடந்து முடிந்தஎல்லா தேர்தல்களிலும் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்தன.

அதே போன்ற முறைகேடுகள் இங்கும் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

மேலும் நடிகர் ராதாரவி போட்டியிடும் முதல் தேர்தல் இது. எனவே, இந்தத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

திமுக சார்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு சைதை கிட்டு தான் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.கலைஞரும் அதைத் தான் விரும்பினார். ஆனால், தொடர்ந்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கிட்டு தனக்குபோட்டியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

இதையடுத்து அங்கு யாரை நிறுத்துவது என்று கிட்டுவிடமே கருணாநிதி கேட்க அவர் சொன்ன பெயர் தான் மா.சுப்பிரமணியம்.இதனால் கிட்டுவின் முழு ஆதரவுடன் திமுக தொண்டர்கள் வீதியில் வலம் வரத் தொடங்கிவிட்டனர்.

வரும் வியாழக்கிழமை தான் தனது தேர்தல் பிரசாரத்தை திமுக முறைப்படி துவக்குகிறது. கட்சியின் பொதுச் செயலாளர்க.அன்பழகன் தலைமையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இவருக்காக கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து பொதுச் செயலாளர் வைகோ 5 நாள் பிரசாரம்செய்யவுள்ளார்.

19ம் தேதி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கும் வைகோ 19 தவிர, 24, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும்இங்கு பிரசாரம் செய்கிறார். வீதி வீதியாகச் சென்று ஓட்டு கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரை மிக பிரம்மாணடமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஏற்கனவே 8 அமைச்சர்கள்கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. தீவிரப் பிரசாரம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டம்நடந்து முடிந்து விட்டது. ராதாரவி வரும் 11ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவுள்ளார்.

பணத்தை அதிமுக அள்ளிக் கொட்டும் என்று தெரிகிறது. இதை மாஜி அமைச்சர்கள் மூலம் திமுகவும் எதிர்கொள்ளும் என்றுகூறப்படுகிறது.

இதனால் சைதை தொகுதி களை கட்டத் தொடங்கியுள்ளது. சைதை தொகுதி சுவர்கள் முழுவதும் திமுக மற்றும் அதிமுகவிளம்பரங்கள் தான் உள்ளன. முடடுச் சந்து சுவர்களைக் கூட இக் கட்சித் தொண்டர்கள் விடவில்லை.

இரு கட்சிகளும் தேர்தல் அறிவிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பே சுவர்களை ரிசர்வ் செய்து வைத்து விட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் பவர் குழு:

இடைத் தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கும் சிறப்பு தேர்தல் பணிக் குழுக்களை அதிமுக அமைத்துள்ளது. மொத்த அமைச்சரவையே 3 ஆகப்பிரிக்கப்பட்டுள்ளது. எம்.பிக்களும் 3 பிரிவுகளாக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகள் முதல் ஆட்களை அமுக்குவது வரை எல்லா வேலைகளையும் இந்த பண பலம் படைத்த குழுக்கள் செய்யும்.

சைதாப்பேட்டை தேர்தல் பணிக் குழுவுக்கு முன்னாள் முதல்வரும் பொதுப் பணித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். இவர்தலைமையில் 7 அமைச்சர்களும் சுலோச்சனா சம்பத், தினகரன், மைத்ரேயன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட 14 பிரமுகர்களும் இருப்பார்கள்.

அச்சிறுப்பாக்கம் தொகுதி துணை சபாநாயகர் வரகூர் அருணாசலத்திடம் தரப்பட்டுளளது. தளவாய் சுந்தரம், செம்மலை, வளர்மதி உள்பட 7 அமைச்சர்களும்திண்டுக்கல் சீனிவாசன், தலித் எழில்மலை உள்பட 10 முக்கியஸ்தர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வாணியம்பாடி தொகுதி அமைச்சர் தம்பிதுரை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் தலைமையில் 7 அமைச்சர்கள், 17 அதிமுக பிரமுகர்கள், காதர்மொய்தீன் தலைமையிலான 10 இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியினர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சிறப்பு காவல் நிலையங்கள்:

இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் அராஜகம் நடக்கலாம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் கூறியுள்ளதால் இம் முறைதீவிரமான கண்காணிப்பில் ஈடுபட கமிஷன் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தனது தொண்டர்களை அடக்கி வைக்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது.

அராஜகம், அடிதடி பயமின்றி மக்கள் வாக்களிக்க வரும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளையும் எடுக்க போலீசுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதிக்குள் தாற்காலிகமாக 10 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சென்னை நகர காவல்துறைஆணையர் விஜய்குமார் தெரிவித்தார்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 20 போலீசார் இருப்பர். 2 கம்பெனி ஆயுதமேந்திய போலீசார் ஏற்கனவே சைதாப்பேட்டையில் நிறுத்தப்பட்டுள்ளது.இது 4 ஆக உயர்த்தப்படும். அதிகமான ரோந்து வாகனங்கள் பாதுகாப்பில் ஈடுபடும் என்றார்.

த.மா.காவின் பெரிய மனது:

இந்த இடைத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என்று த.மா.கா. தலைவர் வாசன் முடிவு செய்துவிட்டார். இந்த மூன்றுதொகுதிகளிலும் வெவ்வேறு கட்சிகளை அவர் ஆதரிக்கிறார்.

சைதாப்பேட்டையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரையும், வாணியம்பாடியில் போட்டியிடும் இந்திய தேசிய லீக் வேட்பாளரையும்,அச்சிறுப்பாக்கத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரையும் ஆதரிக்கப் போவதாக அவர் இன்று அறிவித்தார்.

குழம்பும் காங்கிரஸ்:

காங்கிரசைப் பொறுத்தவரை போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் இளங்கோவன்கூறினார். இன்று இரவு தான் முடிவு செய்யப் போகிறார்களாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X