For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 பா.ம.க. எம்.பிக்கள் அதிமுகவுக்கு தாவ முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள் கட்சி தாவ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி கலகலக்க ஆரம்பித்து விட்டது. அதிமுககூட்டணியில் இருந்து பிரிந்து வந்த பின்னர் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது பாமகவினர் கடும்அதிருப்தியடைந்தனர்.

அடிக்கடி அணி மாறுவது, கட்சி மாறுவதற்கு சமமானது என்று பாமகவினர் பேசத் தொடங்கினர். மக்கள் மத்தியில்மட்டுமல்லாது கட்சியினர் மத்தியிலும் ராமதாஸுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

அந்தக் கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தனியாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். மற்றஎம்.ஏல்.ஏக்களைக் காப்பாற்ற முயற்சிளில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ். தனது எம்.எல்.ஏக்களை உளவு பார்க்கவேபல குழுக்களை தயார் செய்துள்ளார்.

இது தவிர எல்லா எம்.எல்.ஏக்களிடமும் ராமதாஸ் வெற்றுத் தாள்களில் கையெழுத்தும் வாங்கி வைத்துள்ளதாகக்கூறப்படுகிறது. பா.ம.கவை உடைக்கும் வேலை ஜெயலலிதாவால் செங்கோட்டையன் மற்றும் தலித்எழில்மலைக்குத் தரப்பட்டுள்ளது. அவர்களும் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை இழுக்க முயன்று வருகின்றனர்.

இந் நிலையில் பா.ம.கவை விட்டு விலக 2 எம்.பிக்களும் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது பாமகவில் இரண்டு பேருக்குப் பதவி தர முன்வந்தார் வாஜ்பாய். இதில் ஒன்று சண்முகத்துக்கும் இன்னொன்று பு.த. இளங்கோவனுக்கும் தரப்படும் என ராமதாஸ்கூறினார்.

ஆனால், இளங்கோவனுக்குத் பதவி தராமல் அதை ஏ.கே. மூர்த்திக்குக் கொடுத்தார் ராமதாஸ். ரயில்வேதுறைஇணை அமைச்சராகிவிட்ட மூர்த்திக்கு தமிழ் கூட சரியாகப் படிக்கத் தெரியாது. கொட்டை எழுத்தில் எழுதிவைத்து திக்கித் திணறித் தான் எதையும் படிப்பார்.

தனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி ஏமாற்றி விட்டு, தமிழே படிக்கத் தெரியாத மூர்த்திக்கு மத்தியஅமைச்சர் பதவி கொடுத்தது மிகவும் அநியாயமானது என்று பு.தா. இளங்கோவன் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.டெல்லியில் ராமதாஸுடன் நேரடியாக வாக்குவாதம் செய்து விட்டு அவர் சென்னை திரும்பினார்.

ராமதாசின் மகன் அன்புமணியை நீ.. வா.. போ என்று ராமதாஸ் முன்னிலையிலேயே ஒருமையில் திட்டித் தீர்த்தார்.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி முதல் முறையாக தேசிய அளவில் வெடிக்க உள்ளது.இளங்கோவன் மற்றும் துரை ஆகிய இரு எம்.பிக்களும் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர முடிவுசெய்துள்ளனராம்.

பாமகவுக்கு நாடாளுமன்றத்தில் 5 எம்.பிக்கள் மட்டுமே இருப்பதால், 2 பேர் விலகுவதால் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாது என்று தெரிகிறது.

இளங்கோவன் முன்பே அதிமுகவில் சேர முடிவு செய்திருந்தார். ஆனால் இன்னும் ஒரு எம்.பி. விலகினால் தான்தனது பதவி தப்பும் என்பதால் இன்னொரு எம்.பியையும் சேர்த்துக் கொண்டு கட்சி தாவ முடிவு செய்துள்ளாராம்இளங்கோவன்.

வந்தவாசி எம்.பியாக உள்ளார் துரை. தர்மபுரி எம்.பியாக உள்ளார் இளங்கோவன். இருவரும் கட்சியின் நீண்டநாள் உறுப்பினர்கள். ஆனால் ஜூனியரான மூர்த்திக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது, தங்களை மட்டம்தட்டவே என்று இருவரும் நினைக்கின்றனர்.

சில குறிப்பிட்ட நபர்களுக்காகவே கட்சி நடத்தப்பட்டு வருவது போலத் தெரிகிறது. இதனால் கட்சிக்காகஉண்மையாக உழைத்தவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்று இருவரும் குமுறுலுடன் இருந்தனர்.

ராமதாஸின் மகன் அன்புமணியை கட்சிக்குள் திணிப்பதையும் துரை உள்ளிட்ட பல தலைவர்கள் விரும்பவில்லை.ஆனால் ராமதாஸுக்கு எதிராக கருத்து சொல்ல முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால் துரைவெளிப்படையாகவே அதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

இப்படி படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்திகளின் இறுதியாகவே கட்சி தாவ இருவரும் முடிவுசெய்துள்ளனர். இவர்களை வரவேற்க அதிமுகவும் தயாராக உள்ளதாம்.

வன்னிய சமுதாயத்தினரிடையே இளங்கோவன் மற்றும் துரைக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் தருமபுரிஉள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா நம்புகிறாராம்.

ஏற்கனவே 2 எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகியிருப்பதாக கூறியுள்ளனர். இது பாமகவுக்கு லேசான பாதிப்பைஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2 எம்.பிக்கள் விலகினால் அது பாமகவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி ராமதாஸ் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது.

ராமதாசின் பாதுகாப்பு அதிகாரி மாதிரி சபாரி அணிந்து கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்றஎடுபிடி வேலை செய்து வந்தவர் ஏ.கே. மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி. சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. தமிழ்படித்து முடிப்பதற்குள் திக்கித் திணறிவிடுவார். இவர் தான் இப்போது தமிழகத்தின் சார்பில் டெல்லியில்அமைச்சராக உட்காந்திருக்கிறார்.

இளங்கோவன் மறுப்பு:

இந்நிலையில் பாமகவிலிருந்து நான் விலகப் போவதில்லை என இளங்கோவன் மறுத்துள்ளார்.

நான் பாமகவை விட்டு விலகப் போவதாக வந்த தகவல் தவறானது என்று அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.நாங்கள் உருவாக்கிய பாமகவிலிருந்து வெளியேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று இளங்கோவன்கூறினார்.

ஆனால், அதிமுகவுடன் அவர் பேச்சு நடத்தி வருவதை அதிமுக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X