ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஒரே நாளில் தேர்மீண்டும் நிலையை அடைந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும்ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும்.

கடந்த 3ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான நேற்று புகழ்பெற்றதேரோட்டம் நடந்தது.

இதற்காக ஆண்டாளும் ஸ்ரீரெங்கமன்னாரும் கோவிலிலிருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்துதேரில் வைத்து இருவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பதி தேவஸ்தானத்திலிருந்துகொண்டுவரப்பட்ட பட்டுப் புடவை ஒன்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் நேற்று காலை சுமார் 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்"கோவிந்தா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சர் துரைராஜ், காமராஜர் மாவட்டகலெக்டர் கோபால், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான இன்பத்தமிழன் உள்ளிட்டவர்கள் வடம் பிடித்துதேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

ஆண்டாள் கோவிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கே மீண்டும்நிலையை வந்தடைந்தது.

வழக்கமாக தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேருவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாகும். சில சமயம் மூன்றுநாட்கள் கூட ஆகும். ஆனால் இம்முறை ஆறே மணி நேரத்தில் தேர் மீண்டும் நிலைக்கு வந்ததால் பக்தர்கள்பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தத் தேர்த் திருவிழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே திருவாரூர்தேருக்கு அடுத்து இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற